பூரணி (இதழ்)
Appearance
பூரணி ஈழத்திலிருந்து வெளியான சிற்றிதழ்களில் ஒன்று. குறைந்த எண்ணிக்கையான இதழ்களே வெளியான போதும் பூரணியின் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. 1972 இல் பூரணி முதல் இதழ் வெளியானது. காலாண்டிதழாக வெளியான பூரணியின் ஆசிரியர்களாக க. சட்டநாதன், என். கே. மகாலிங்கம் ஆகியோர் பணியாற்றினர்.