பூமத்திய ரேகை கோணமானி
பூமத்திய ரேகை கோணமானி (Equatorial Sextant), என்பது உயரத்தை அளக்கும் கருவியாகும். இது வில்லியம் ஆசுடின் பர்ட்டால் (William Austin Burt) உருவாக்கப்பட்டது.[1] அவர் நவம்பர் 4, 1856 ல் அமெரிக்க நாட்டில் தனது கருவிக்கான காப்புரிமை (காப்புரிமைச் சான்றிதழ் எண்: 16,002) பெற்றார்.[2][3] இந்தக் கோணமானி, கடலில் கப்பலின் இடத்தை துல்லியமாக கண்டறிய உதவுகிறது. [4][5] பர்ட், தான் உருவாக்கிய சூரிய திசைமானியின் செயல்பாடுகளைப் பயன்படுத்தி கடற்பயணத்தை எளிதாக்கும் இக் கருவியை வடிவமைத்தார்.[6]
வரலாறு
[தொகு]பர்ட், 1851 ஆம் வருடம் ஒரு நாளில், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியாவிற்கு மெதுவாகச் செல்லும் கப்பலில் திரும்பிக் கொண்டிருந்தார். தனது நீண்ட பயணத்தின் போது, கடலை கூர்ந்து கவனித்து பல குறிப்புகளை எழுதிய படி பயணித்தார். தனது சூரிய திசைகாட்டியை, மாலுமிகள் கடற் பயணத்திற்கு எவ்வாறு பயன்படுத்த இயலும் என ஆராயத் தொடங்கினார். தனது ஆறு வார கால பயணத்தில், மாலுமிகள் பயன்படுத்திய திசைகாட்டிகள், பல முறை தவறாக திசை காட்டியதைக் கண்கூடாக கண்டறிந்தார். அதனாலேயே தனது பயணம் தாமதமானதை உணர்ந்தார். தனது சூரிய திசைகாட்டியில் சில மாற்றங்களைச் செய்து, அது கடற் பயணத்திற்கு சரியான திசையை காட்டிடும்படி வடிவமைத்தார். தனது வடிவமைப்பிற்கு பல பெயர்களை மாற்றி மாற்றி வைத்து, இறுதியாக பூமத்திய ரேகை கோணமானி என்ற பெயரை வழங்கினார். மற்ற திசைகாட்டிகள் கப்பலில் இருந்த அதிகப்படியான இரும்பினால் திசையை சரியாகக் காட்டவில்லை.[6]
1855 ஆம் ஆண்டு சூன் மாதம் 18 ஆம் நாளில், இல்லினாய்சு என்ற பெயர் கொண்ட கப்பலில், தனது கருவியுடன் முதற் பயணம் செய்தார்.[7]
1856 ஆம் ஆண்டு, தனது கண்டுபிடிப்பை அமெரிக்க கப்பற்படை மற்றும் கடலோர காவற்படை ஆகியவற்றிற்கு அனுப்பினார். அவர்கள், பர்ட்டின் கண்டுபிடிப்பை ஏற்று கொண்டனர். 1856 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாளில் அவரின் கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெற்றார்.[8]
விளக்கம்
[தொகு]பர்ட்டின் கருவி, திசைக்கோணம், உயரம், காந்தவிலக்கம் (declination) ஆகியவற்றை கண்டறிய உதவுகிறது. இக்கருவியில் இரண்டு முதன்மையான வளையங்கள் உள்ளன. உள் அட்சக்கோடு வளையம் வெளி தீர்க்க ரேகை வளையத்துடன் 90 டிகிரி கோணத்தில் அமைந்திருக்கும். திசைக்கோண வளையம் தீர்க்க ரேகை வளையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இவை கப்பல் எவ்வாறு திரும்பினாலும் காந்த ஊசி (magnetic compass) சரியான திசையை மட்டும் சரியாகக் காட்டும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.[7]
இவரது கண்டுபிடிப்பு, கடற்பயணத்தின் போது ஏற்படும் பல இடர்ப்பாடுகளைக் களைய உதவியது. உயரம், நேரக்கோணம் (hour angle), திசைக்கோணம் ஆகியவற்றை கண்டறியும் அமைப்பு, இக் கருவியிலே உள்ளது. இவற்றால் கப்பலின் திசை துல்லியமாக அளவிடப்பட்டது. கடற் காலமானியுடன் இவற்றை பயன்படுத்தி திசை கண்டறியப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mining and metallurgy, Issues 169-180 By American Institute of Mining and Metallurgical Engineers, p. cccxli Charles S. Burt, the grandson of William Austin Burt
- ↑ 2.0 2.1 United States Letters Patent No. 16,002 (Nov. 4, 1856) - Equatorial Sextant
- ↑ Michigan Historic Magazine, Volume 78, Michigan Department of State, 1994, p. 15
- ↑ "Smithsonian - Equatorial Sextant". Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2017-12-30.
- ↑ "The life and times of William A. Burt". Archived from the original on 2011-07-15. பார்க்கப்பட்ட நாள் 2017-12-30.
- ↑ 6.0 6.1 Farmer, p. 1181
- ↑ 7.0 7.1 Burt, p. 129
- ↑ Burt, p. 130
வெளியிணைப்புகள்
[தொகு]- Burt, John A., They left their mark: William Austin Burt and his sons, surveyors of the public domain, Landmark Enterprises, 1986, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-910845-31-X
- Equatorial Sextant / Altitude Instrument 1856 patent
- Farmer, Silas, The history of Detroit and Michigan, 1899
- Tuttle, Charles Richard, General History of the state of Michigan with biographical sketches, R. D. S. Tyler & Co., Detroit Free Press Company, 1873