பூண்டு பீட்சா குச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூண்டு பீட்சா குச்சி
வகைபீத்சா
தொடங்கிய இடம்கனடா
பகுதிAtlantic Canada
முக்கிய சேர்பொருட்கள்பீட்சா மாவு, பூண்டு வெண்ணெய், வோக்கோசு, பாலாடைக்கட்டி, பன்றி இறைச்சி

பூண்டு பீட்சா குச்சி (பிரெஞ்சு: Doigts à l'ail, ஆங்கிலம்: Garlic fingers, garlic cheese fingers) என்ற பூண்டு வகை உணவு, அட்லாண்டிய கனட (Atlantic Canadian) உணவு ஆகும். இது பீட்சாவை போன்றே தயாரிக்கப்பட்டாலும், பீட்சா துண்டுகள் முக்கோண வடிவத்திற்கு பதிலாக, நீள நீள துண்டுகளாக வெட்டப்பட்டு பரிமாறப்படும்.[1]

வழக்கமாக இதுபோன்ற உணவுக்கு மேற்புறம் தக்காளிப் பசையப் பூசுவர். ஆனால், இவ்வுணவில் பூண்டு வெண்ணெய், வோக்கோசு, பாலாடைக்கட்டி துருவல்களைத் தூவித் தருவர். சில நேரங்களில் பன்றி இறைச்சி தூவலாகத் தருவர். வேறுசில (Doner kebab sauce அல்லது marinara sauce) துணை சுவையூட்டிகளையும் தருவர். பெரிய அங்காடிகளில் பீத்சா குச்சிகள் (pizza fries), பாலாடைக் குச்சிகள், இத்தாலிய குச்சிகள் எனவும் விற்பர்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Allison Saunders (20 February 2014). "Heart of garlic". The Coast. Coast Publishing Ltd. Archived from the original on 25 June 2014. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச்சு 2024.
  2. "Wisconsin "Pizza Fries"?". Chowhound. 5 Feb 2015. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச்சு 2024.
  3. "School district pays $16K for cheese fries", Stevens Point Journal, May 25, 2016. Retrieved August 10, 2016.
  4. "Five can't-miss casual dining spots". stevenspointareawi.com. January 12, 2016. Archived from the original on August 29, 2016. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச்சு 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டு_பீட்சா_குச்சி&oldid=3917070" இலிருந்து மீள்விக்கப்பட்டது