பூட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூட்டு

பூட்டு என்பது ஒரு பாதுகாப்புக் கருவி. மனிதன் உடைமைகளைப் பாதுகாக்க இந்தக் கருவி உதவியாக உள்ளது. இது இரும்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தேவைகளுக்கேற்ப பல விதமான வடிவங்களில், பல்வேறு வசதிகளுடன் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குடிசைத் தொழில்[தொகு]

பூட்டின் செயல்நுட்பம்

நவீன எந்திரங்களின் உதவியோடு தொழிற்சாலைகளில் பூட்டு தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் இருப்பினும் பூட்டு தயாரிக்கும் தொழிலைக் குடிசைத் தொழிலைப் போல பல இடங்களில் செய்து வருகின்றனர். இந்தியாவில் அலிகார் எனும் ஊரில்தான் பூட்டுக்கள் தயாரிப்பு அதிக அளவில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் திண்டுக்கல் பூட்டு தயாரிப்புக்குப் பெயர் பெற்ற ஊராகும். இம்மாவட்டத்தில் திண்டுக்கல், நல்லாம்பட்டி, யாகப்பன்பட்டி, பாறைப்பட்டி, புதூர், அனுமந்த நகர் என்று பல பகுதிகளிலும் பூட்டுத் தயாரிப்பது ஒரு குடிசைத் தொழிலாக நடைபெறுகிறது.

பூட்டு வகைகள்[தொகு]

  • பூட்டுகள் அதிலிருக்கும் நெம்புகோல்கள் வழியாக வகைப்படுத்தப்படுகின்றன. பூட்டுத் தயாரிப்பில் அதிக அளவாக ஆறிலிருந்து எட்டு நெம்புகோல்களுடையதாய் தயாரிக்கப்படுகின்றன. இதில் மாங்காய் பூட்டுகள் வகை மிகவும் புதிது. இதில் பூட்டின் பக்கவாட்டில் ஒரு பொத்தான் இருக்கும். அதை அழுத்தினால் தான் திறக்க முடியும். மாங்காய்ப் பூட்டு, கதவுக்கான சதுரப் பூட்டு, அலமாரிப் பூட்டு, இழுப்பான் பூட்டு என்று பல வகையான பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
  • திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் மணிப்பூட்டுகள் என்பதும் சிறப்பான ஒன்றாகும். எட்டு அங்குலமுடைய இந்தப் பூட்டு ஒவ்வொரு முறை சாவியைச் சுழற்றும் போதும் மணிச்சத்தம் வரும். இதில் ஐந்திலிருந்து பத்துமுறை மணியடிக்கும் வகையான பூட்டுகளும் உண்டு.
  • பித்தளைப் பூட்டுகளும், குரோமியப் பூச்சுப் பூசின பூட்டுகளும் அதிகம் தயாரிக்கப்படுகின்றன.

தொடர்பு தொழில்கள்[தொகு]

பூட்டுத் தொழிலுடன் தொடர்புடைய வேறு சில தொழில்களும் பூட்டுடன் சேர்ந்து வளர்ச்சியடைந்துள்ளன. பூட்டுத் தொழிலின் இன்னொரு வளர்ச்சியாக இரும்புப் பெட்டிகள் தயாராரிக்கப்படுகின்றன. சிறிய வடிவிலிருந்து பெரிய வடிவத்திலான பல வகையான இரும்பு பெட்டிகள் தயாரிப்பும் இத்தொழிலுடன் சேர்த்து நடைபெறுகிறது. இவை தவிர கோயில்களுக்கான பெரிய உண்டியல்கள், அதிக எடையுள்ள ஏழு சாவிகள் வரை உள்ள பாதுகாப்புப் பெட்டகங்கள் போன்றவையும் இத்தொழிலுடன் இணைத்துச் செய்யப்படுகின்றன.

திண்டுக்கல் பூட்டுச் சிறப்பு[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Locks
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டு&oldid=3601175" இலிருந்து மீள்விக்கப்பட்டது