பூஞ்சை உயிரியல்
Appearance
பூஞ்சை உயிரியல் (இதழ்) (Fungal Biology) என்பது பூஞ்சை, இலைக்கன், மதுவம் போன்றவை குறித்த ஒப்பார்-மதிப்பீடு செய்த அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆய்வு ஆவணங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் ஒரு அறிவியல் இதழாகும்.[1] இந்த இதழ் பிரித்தானிய பூஞ்சையியல் குமுகத்தால் வெளியிடப்பட்டது. இது 1896 ஆம் ஆண்டு முதல் 1989 வரை பிரித்தானிய பூஞ்சையியல் குமுகத்தின் பரிவர்த்தனைகள் என்ற பெயரில் வெளிவந்தது. பின்னர் இது 1989 முதல் 2010 முடிய பூஞ்சையியல் ஆராய்ச்சி என்ற பெயரில் வெளிவந்தது. இந்த இதழின் நிறுவன ஆசிரியராக கார்லெடன் ரியா என்பவர் 1896 முதல் 1930 முடிய இருந்தார்.[2]
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website
- Online access to Transactions of the British Mycological Society
- Online access to Mycological Research
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fungal Biology".
- ↑ John Webster (1997). "The British Mycological Society, 1896–1996". Mycological Research 101: 1153–1178.