பூஜா சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூஜா சர்மா
2020இல் பூஜா சர்மா
பிறப்புஅண். 1980 (அகவை 43–44)
விருதுகள்நாரி சக்தி விருது (2022)

பூஜா சர்மா (Pooja Sharma) (பிறப்பு c. 1980 ) ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார். இவர் தனது கிராமத்தில் வீட்டிற்கு வெளியே வேலை செய்யும் முதல் பெண்மணியாக உள்ளார். இவர், ஒரு சுய உதவிக் குழுவை நிறுவி, சுய தொழிலாக ஒரு பேக்கரியில் 150 பெண்களை வேலைக்கு உட்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்துள்ளார். இவரது சாதனைகளினால், பெண்களுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான நாரி சக்தி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

தொழில்[தொகு]

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் குருகிராமுக்கு அருகில் உள்ள சந்து கிராமத்தில் பூஜா சர்மா வசித்து வருகிறார் . [1] இவர் வசித்த கிராமத்தில் வழங்கப்படும் கல்வி, ஆண்-பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் இணை கல்வியாக மாறும் வரை இவர் பள்ளிக்குச் சென்றார். மேலும் இவருடைய பெற்றோர் இவரை ஆண்களுடன் படிக்க வைப்பதை விட பள்ளியை விட்டு வெளியேறச் செய்தனர். இவர் 1999 இல் திருமணம் செய்து கொண்டார். [2] 2005 ஆம் ஆண்டில், பூஜா ஷர்மா, இவரது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளைக் கொண்ட இவரது குடும்பத்திற்கு நிதிச் சிக்கல்கள் இருந்தன, எனவே பூஜா வீட்டிற்கு வெளியே வேலை செய்யும் கிராமத்தின் முதல் பெண்மணி ஆனார். இவர் முதலில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். பின்னர் 2010 இல் தனது மாமனாருக்குச் சொந்தமான அவேலியை ஏற்றுக்கொண்டார். இவர், மாடுகளை வாங்கி, அதன் மூலமாக வெளியாட்களுக்கு பால் கொடுக்க ஆரம்பித்தார்; கிருஷி விக்யான் கேந்திராவின் அதிகாரிகள் கிராமத்திற்குச் சென்றபோது, தையல் கற்றுக்கொள்வது விற்பனைக்கு சாத்தியமற்றது என்று அதை நிராகரித்தார்.[1] மேலும், சந்தைப்படுத்தக்கூடிய ஏதாவது ஒன்றில் பயிற்சி தரக் கோரினார். அதனால், உணவு உற்பத்தியில் பயிற்சி பெற்றார். [1]

பெண் உறுப்பினர்கள் மட்டுமே அடங்கிய குழுவுடன், இவர் க்ஷிடிஸ் என்ற சுயஉதவி குழுவை நிறுவினார். ஆனால் இது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அவரது கணவர் மற்றும் அவரது ஊழியர்களின் கணவர்களை வற்புறுத்த வேண்டியிருந்தது. [2] இவர் டாலியா (கஞ்சி), இலட்டுகள், பருப்பு ( சோளம் ) மற்றும் சோயா பருப்புகள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்தார். [1] [2] 2017 ஆம் ஆண்டில், ஒரு அரசு சார்பற்ற அமைப்பு சர்மாவிற்கு அடுமனை அமைக்க உதவியது, சில உள்ளூர் மக்களால் பேய் நடமாட்டம் இருப்பதாக நம்பப்பட்ட ஒரு மாளிகையில், [2] தற்போது 150 பெண்களை வேலைக்கு அமர்த்தி, இவரின் பணி நன்றாக நடைபெறுகிறது. இவரது தயாரிப்புகள், குருகிராம் உணவகங்களுக்கு ஆளிவிதை, ஓட்ஸ் மற்றும் வால்நட் ஆகியவற்றால் செய்யப்பட்ட பிஸ்கட்களை வழங்குகிறது. [1] அரியானாவைச் சேர்ந்த 1,000 பெண்களுக்கு பூஜா சர்மா பயிற்சி அளித்துள்ளார். [3]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

அரியானா மாநில அரசு 2015 ஆம் ஆண்டில் விவசாயத் தலைமைக்கான விருதுகளையும், அதற்கு அடுத்த ஆண்டில் விவசாயப் புதுமைக்காகவும் பூஜா சர்மாவுக்கு விருதுகளை வழங்கியது. [2] 2016 ஆம் ஆண்டில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் இவருக்கு பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அந்தியோதயா கிரிஷி புரஸ்கார் மற்றும் புதுமையான கிருஷி சம்மான் ஆகிய இரண்டையும் வழங்கியது. [4] சர்வதேச மகளிர் தினமான 2022 அன்று, பெண்களுக்கான இந்தியக் குடிமகன்களுக்கு வழங்கப்படும் நாரி சக்தி விருது பெற்றார் [3] .

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Breaking shackles while baking bread". Hindustan Times. 1 September 2019. https://www.hindustantimes.com/gurugram/breaking-shackles-while-baking-bread/story-qucu4InPsVTt3R4fAFB5fK.html. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Nitnaware, Himanshu (8 November 2021). "Started From a 'Haunted Mansion', This Woman's Healthy Snack Biz Earns Rs 8 Lakh/Yr". The Better India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 May 2022.
  3. 3.0 3.1 Kainthola, Deepanshu (8 March 2022). "President Presents Nari Shakti Puraskar for the Years 2020, 2021" (in en). Tatsat Chronicle Magazine. https://tatsatchronicle.com/president-presents-nari-shakti-puraskar-for-the-years-2020-2021/. 
  4. "Pooja Sharma honored with 'Nari Shakti Puraskar'" (in en). 10 March 2022. https://www.drishtiias.com/state-pcs-current-affairs/pooja-sharma-honored-with-nari-shakti-puraskar. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜா_சர்மா&oldid=3653246" இலிருந்து மீள்விக்கப்பட்டது