பூங்கொடி பதிப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூங்கொடி பதிப்பகம் என்பது சென்னையில் செயல்பட்டுவரும் ஒரு பதிப்பகம் ஆகும். இந்தப் பதிப்பகமானது 1968 ஆண்டு சுப்பையாவால் துவக்கப்பட்டது.[1] இப்பதிப்பகமானது ம. பொ. சிவஞானம், மா. இராசமாணிக்கனார், வெ. சாமிநாத சர்மா, தி. க. சிவசங்கரன், வல்லிக்கண்ணன், லக்ஷ்மி, பெ. சு. மணி, கழனியூரன் உள்ளிட்ட முக்கிய இலக்கிய ஆளுமைகளின் 4,000க்கும் மேற்பட்ட நூல்களை இதுவரை வெளியிட்டுவருகின்றது.

இப்பதிப்பகம் வெளியிட்ட ம. பொ. சி.யின் விடுதலைப் போரில் தமிழகம் நூலானது, அதன் சிறப்பு கருதி தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது. இவர்களின் மற்றொரு வெளியீடான லக்ஷ்மியின் ஒரு காவிரியைப் போல புதினத்துக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டிருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ரா.பாரதி (2018 சூன 24). "பொன்விழா காணும் பூங்கொடி!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 25 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்கொடி_பதிப்பகம்&oldid=2546145" இருந்து மீள்விக்கப்பட்டது