கழனியூரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். எஸ். அப்துல் காதர் (1954 - 2017 சூன் 27) தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் கழனியூரன் என்னும் புனைப்பெயரில் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதியவர். கரிசல்காட்டு எழுத்தாளரான கி. இராசநாராயணனின் தொடர்பால் நாட்டார் வழக்காற்றுத் துறையில் ஈடுபாடு கொண்டார். திருநெல்வேலி மாவட்ட நாட்டார் கதைகளைத் தொகுத்ததாலும் அப்பகுதியின் வழக்காறுகளை தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்துவதாலும் இவரை தமிழிலக்கிய உலகம் இவரை செவக்காட்டு கதைசொல்லி என்கிறது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கழனியூரன் என்னும் அப்துல் காதர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் என்னும் சிற்றூரில் 1954 ஆம் ஆண்டில் பிறந்தவர்.[1] கழனியூரன் இடைநிலை ஆசிரியர் பயிற்சியும் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் ஆகிய பட்டங்களையும் பெற்றிருக்கிறார். கழனியூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

எழுதிய நூல்கள்[தொகு]

கழனியூரன் எழுதியவையும் தொகுத்தவையும் பின்வரும் நூல்களாக வெளிவந்துள்ளன:[2]

 1. தாய்வேர் - பூங்கொடி பதிப்பகம், சென்னை
 2. கதைசொல்லியின் கதை - தாமரை செல்வி பதிப்பகம், சென்னை
 3. நெல்லை நாடோடிக் கதைகள் - மித்ரா பதிப்பகம், சென்னை
 4. மண் மணக்கும் மனுஷங்க - பூங்கொடி பதிப்பகம், சென்னை
 5. நாட்டுப்புற நீதிக்கதைகள் - காவ்யா பதிப்பகம், சென்னை
 6. பன்னாட்டு சிறுவர் நாடோடிக் கதைகள் - பூங்கொடி பதிப்பகம், சென்னை
 7. நாட்டுப்புறத்து நகைச்சுவைக் கதைகள் - காவ்யா பதிப்பகம், சென்னை
 8. வேரடி மண்வாசம் - பூங்கொடி பதிப்பகம், சென்னை
 9. கி.ரா .அணிந்துரைகள் முன்னுரைகள் - சந்தியா பதிப்பகம். சென்னை
 10. செவக்காட்டு மக்கள் கதைகள் - சந்தியா பதிப்பகம்.சென்னை
 11. தாத்தா பாட்டி சொன்ன கதைகள் - பாரதி பதிப்பகம், சென்னை
 12. மண்பாசம் - சந்தியா பதிப்பகம், சென்னை
 13. ராட்சசனும் குள்ளனும் - யுரேகா பதிப்பகம், சென்னை
 14. புத்தகக் கோயில் – அகரம், தஞ்சாவூர்
 15. குறுஞ்சாமிகளின் கதைகள் - உயிர்மை பதிப்பகம்,சென்னை
 16. வாய்மொழி வரலாறு - சந்தியா பதிப்பகம், சென்னை
 17. பாம்பின் கால்தடம் - அமிர்தாபதிப்பகம், சென்னை
 18. நட்சத்திர விழிகள் (ஹைக்கூ) – அகரம், தஞ்சாவூர்
 19. நிரந்தர மின்னல்கள் (ஹைக்கூ) – அகரம், தஞ்சாவூர்
 20. நெருப்பில் விழுந்த விதைகள் (கவிதைகள்) – அகரம், தஞ்சாவூர்
 21. மண்ணின் கதைகள் மக்களின் கதைகள் - உயிர்மை பதிப்பகம், சென்னை
 22. நாட்டுபுற வழக்காறுகள் - தாமரை செல்வி பதிப்பகம் , சென்னை
 23. நாட்டுபுற நம்பிக்கைகள் – அகரம், தஞ்சாவூர்
 24. அன்புள்ள கி.ரா (கடித இலக்கியம்) - உயிர்மை பதிப்பகம்,சென்னை.
 25. மரப்பாச்சி மனுசி (சிறுகதை) – அகரம், தஞ்சாவூர்
 26. கதைசொல்லி (பகுதி 1) – அகரம், தஞ்சாவூர்
 27. கதைசொல்லி (பகுதி 2) – அகரம், தஞ்சாவூர்
 28. இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் - பூங்கொடி பதிப்பகம், சென்னை
 29. பன்னாட்டுச் சிறுவர் நாடோடிக் கதைகள் - பூங்கொடி பதிப்பகம், சென்னை
 30. நடைவண்டி - பூங்கொடி பதிப்பகம், சென்னை
 31. வல்லிக்கண்ணன் கடிதங்கள் - மித்ரா பதிப்பகம், சென்னை
 32. வல்லிக்கண்ணன் வரலாறு - சாகித்திய அகாதெமி, சென்னை
 33. நிறைசெம்பு நீரில் விழும்பூக்கள் - உயிர்மை பதிப்பகம்,சென்னை
 34. மினாராக்களில் கூடுகட்டும் புறாக்கள் - சந்தியா பதிப்பகம், சென்னை
 35. வளர்பிறை தேய்பிறை (புதினம்)
 36. இருளில் கரையும் நிழல் (புதினம்)
 37. காட்டுப்பூவின் வாசம்,சிறு கதைகள் அன்னம் பதிப்பகம் தஞ்சாவூர்
 38. தி.க.சி.என்றொரு தோழமை தொகுப்பு நூல் காவியா பதிப்பகம் சென்னை
 39. கழநீயூரன் கட்டுரைகள் ( 1௦௦௦ பக்கங்கள்) காவியா பதிப்பகம் சென்னை
 40. கழநீயூரன் கதைகள் (1oooபக்கங்கள்) காவியா பதிப்பகம்
 41. பறவைகள் விலங்குகள் குழந்தைகள் (சிறுவர் நாடோடிக் கதைகள்) உயிர்மை பதிப்பகம் சென்னை
 42. நாட்டுப்புறத்து நகைச்சுவைக் கதைகள், அநுராகம், சென்னை, 2004
 43. நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் - (கி. ராஜநாராயணன், சண்முகசுந்தரம், பாரததேவி ஆகியோருடன் இணைந்து தொகுத்தது) சாகித்திய அகாதெமி, சென்னை
 44. மறைவாய்ச் சொன்னகதைகள் - கி. ராஜநாராயணனுடன் இணைந்து தொகுத்தது - உயிர்மை பதிப்பகம், சென்னை

தொடர்[தொகு]

மறைவு[தொகு]

கழனியூரன் விவசாயிகளுக்கும், தன்னுடைய நிலத்திற்கும் பூச்சிக்கொல்லி, ரசாயன மருந்துகள் வாங்கி தந்தமையால் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளானார்.[3] புற்றுநோய்க்கான தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.[4]எனினும் 2017 சூன் 27ஆம் சென்னையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.[5]

சான்றடைவு[தொகு]

 1. Akilan, Mayura (27 June 2017). "கரிசல் காட்டு கதை சொல்லி எழுத்தாளர் கழனியூரன் காலமானார்". https://tamil.oneindia.com.
 2. அரிஅரவேலனுக்கு கழனியூரன் அனுப்பிய மின்னஞ்சல்
 3. "கழனியூரன் எனும் கதை வேட்டைக்காரர்". இந்து தமிழ் திசை.
 4. "கரிசல் எழுத்தாளர் கழனியூரன் காலமானார்!". https://www.vikatan.com/.
 5. "கதை சொல்லி கழனியூரன் மறைவு - - Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon" (27 June 2017).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கழனியூரன்&oldid=2912138" இருந்து மீள்விக்கப்பட்டது