பூக்கோ தனி ஊசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூக்கோ தனி ஊசல், பான்தியோன், பாரீஸ்

பூக்கோ தனி ஊசல் (Foucault pendulum) (English: /fˈk/ foo-KOH-'; French pronunciation: ​[fuˈko]), லியோன் பூக்கோ எனும் பிரெஞ்சு இயற்பியலாளர் பெயரால் அழைக்கப்படுகின்றது. இது புவியின் சுழற்சியைக் கண்டறிய உருவாக்கப்பட்ட செயல்முறை விளக்கக் கருவியாகும். புவி தன்அச்சில் சுழல்கின்றது என நெடுங்காலமாக அறியப்பட்டிருந்தாலும், 1851 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பூக்கோ தனி ஊசல் தான் புவியின் சுழற்சியை எளிமையாக அறிய உதவிய செய்முறைகருவியாகும். இந்நாளில் பூக்கோ தனி ஊசல், பல்கலைக்கழகங்களிலும் அறிவியல் காட்சியகங்களிலும் மக்கள் காண்பதற்கும் செயல்முறை விளக்கம் பெறுவதற்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளிஇணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூக்கோ_தனி_ஊசல்&oldid=2697914" இருந்து மீள்விக்கப்பட்டது