புள்ளிக்குவியமில்குறை (Astigmatism) எனும் இக்குறைபாட்டில் விழிவெண்படலம் அல்லது வில்லையின் மேற்பரப்பு ஒழுங்கற்றதாகவோ அல்லது வீக்கமான துருத்தமாகவோ காணப்படுகிறது, இதனால் கண்ணின் ஒருபகுதியில் ஒளிச்சிதறல் அதிகமாகவோ அல்லது மிகக்குறைவாகவோ காணப்படும், இதனால் ஏற்படும் பிம்பங்கள் சரிவரக் குவிக்கப்படுவதில்லை.[1] பொருளின் ஒரு பகுதியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்கு முன்னால் மையோபியா போன்றும் மற்ற பகுதியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்குப் பின்னால் ஹைப்பர் மெட்ரோபியா போன்றும் குவிக்கப் படுகின்றன. புள்ளிக்குவியமில் குறைபாட்டைக் கண்ணுக்கு முன் உருளைவில்லை வைத்துச் சரிசெய்யலாம். இந்த வில்லையின் புறப்பகுதியின் வளைப்பகுதி மாறுபட்டுக் காணப்படுவதால் இது கண்ணின் குறைபாட்டினைச் சரி செய்கிறது.[2]