புற்றுக் கூற்றளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஊடுகதிர்ச் சிகிச்சைக்காக தயார்படுத்தப்படும் ஒரு புற்று நோயாளி

புற்றுக் கூற்றளவு (tumour lethal dose) என்பது புற்று நோய் கண்ட திசுக்களுக்கு கூற்றாய் (இறப்பதற்காய்) அமையும் கதிர் ஏற்பளவாகும். புற்று நோய் திசுக்களை முற்றும் அழிக்க சுமார் 60 முதல் 80 கிரே கதிர் ஏற்பளவு தேவைப்படும். புற்று கட்டிகளை அழிப்பதையும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதையும், அவர்களுடைய வாழ்நாட்களை அதிகப்படுத்துவதையும் குறிகோள்களாகக் கொண்டுள்ள அதேசமயம், புற்று வளரும் நல்ல திசுக்களை கதிர்வீச்சின் தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகிறது. எனவே, புற்று செல்களுக்கு அதிக அளவு கதிர்வீச்சை அளிக்கக்கூடிய, ஆனால் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும், உயர்தர கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

கூற்றளவு 50/30[தொகு]

கூற்றளவு 50/30 (lethal dose 50/30, LD-50/30) என்பது சோதனைக்காக எடுத்துக் கொண்ட ஒரு தொகுதி சிற்றுயிரிகளில் (எலி, முயல் போன்றனவற்றில்) 30 நாட்களில் 50 விழுக்காடு இறப்பதற்குத் தேவையான ஏற்பளவினைக் குறிக்கும். LD50/30 அல்லது LD50/60 போன்ற அளவுகள் சிகிச்சை எதுவுமில்லாமல் 30 அல்லது 60 நாட்களில் 50% இறப்பதற்குத் தேவையான ஏற்பளவினைக் குறிக்கும். 60 நாட்களுக்கு மேல் உயிருடன் இருக்கும் உயிரினங்கள் உயிர்வாழும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் இவ்வளவுகள் உடநல இயற்பியலில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் கூற்றளவு மாறுபடும். கதிர்வீச்சின் தாக்கம் ஒவ்வொரு உயிரினத்திலும் எவ்வாறுள்ளது என அறிய இது உதவுகிறது.

பொதுவாக LD 50/30 இன் அளவு 400 முதல் 450 ரெம் (4 முதல் 5 சீவெர்ட்) ஆக இருக்கும். LD 50/60 அண்ணளவாக 2.5 முதல் 3 கிரே ஆகும்.

சில உயிரினங்களுக்கு கூற்றளவு 50/30[தொகு]

  • குரங்கு 5 கிரே
  • மனிதன் 4--6 கிரே
  • எலி 6--7 கிரே
  • தவளை 7 கிரே
  • ஆமை 15 கிரே
  • நத்தை 100 கிரே
  • அமீபா 1000 கிரே

குறைகூற்றளவு[தொகு]

புற்று நோய் வளரும் நல்ல திசுக்களிலும் புற்றுநோய் கண்ட திசுக்களை அடுத்தும் காணப்படும் நல்ல திசுக்களும் கதிர்மருத்துவத்தின் போது கதிர்வீச்சினை ஏற்கின்றன, இதனால் அவை சேதமுறலாம். இது குறை கூற்றளவு (sublethal dose) எனப்படும். இந்த அளவு கூற்றளவினை விடக் மிக்க குறைவானது. சேதம் 2-3% ஆகவே இருத்தல் வேண்டும். போதுமான கால இடைவெளி, நல்ல உயிர் சத்து, ஆற்றல் கொடுக்கப்பட்டால், இந்த சேதப்படுத்தப்பட்ட உயிரணுக்கள சேதத்தினை முழுதும் சமாளித்து நல்ல நிலைக்கு வந்துவிடக்கூடும். ஆனால் சேதம் சரிசெய்யப்படும் முன், மேலும் அதிக சேதம் கதிர் வீச்சினால் ஏற்படுமானால், அதுவே கூற்றளவாக மாறும். குறைகூற்றளவு சரிசெய்யப்படுவதின் அரைப் பொழுது (Recovery Half Life) பொதுவாக ஒரு மணி நேரமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புற்றுக்_கூற்றளவு&oldid=1480882" இருந்து மீள்விக்கப்பட்டது