புரோவரி போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோவரி போர்
Battle of Brovary
கீவ் மண்டலத் தாக்குதல், 2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு பகுதி
நாள் 9 மார்ச்சு 2022 – present (2 ஆண்டு-கள், 1 மாதம் and 4 நாள்-கள்)
இடம் புரோவரி, கீவ் மாகாணம், உக்ரைன்
முடிவு தொடர்கிறது
பிரிவினர்
 உருசியா  உக்ரைன்
படைப் பிரிவுகள்
உருசியா உக்ரைன்
இழப்புகள்
தெரியவில்லை தெரியவில்லை

புரோவரி போர் (Battle of Brovary) 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 ஆம் தேதியன்று உக்ரைன் நாட்டின் கீவ் மண்டலத்திலுள்ள புரோவரி நகரத்தில் நடைபெற்ற போர் நடவடிக்கையைக் குறிக்கிறது. 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பின் போது, ​​கீவ் மண்டலத் தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த இராணுவ நடவடிக்கை நடைபெற்றது.

போர்[தொகு]

மார்ச்சு மாதம் 9 ஆம் தேதியன்று மாலை, உருசியப் படையினரின் ஒரு படைப்பிரிவு புரோவரி நகரத்தை நெருங்கியது. ஆனால் உக்ரைனியப் படைகளால் அந்த உருசியப் படை அழிக்கப்பட்டது.[1][2] கணிசமான அளவு படைவீரர்களையும் ஆயுதங்களையும் இழந்ததால், உருசியப் படைகள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[3][4] போரின் போது உருசிய படைத் தளபதி ஆண்ட்ரி சாகாரோவு கொல்லப்பட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.[5]

உருசியப் படை உக்ரைனிய இராணுவம் மற்றும் புரோவரியில் உள்ள உளவுத்துறைக்கான முக்கிய மையத்தை முடக்கியதாக மார்ச்சு மாதம் 12 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.[6] இருப்பினும் புரோவரி நகரத்தின் நகரத்தந்தை, "நாங்கள் அவர்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Під Броварами розбили колону окупантів, шукають втікачів". Коментарі Україна (in ua). 2022-03-09. பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Johnson, Sabrina (2022-03-10). "Battle for Kyiv begins: Ukraine repels Russian tanks on edge of capital". Metro (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-13.
  3. Salisbury, Josh (2022-03-10). "Dramatic video shows 'Russian tanks destroyed' in ambush near Kyiv". www.standard.co.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-12.
  4. Ukrainian Forces Destroy Russian Tank Convoy Near Kyiv (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-03-13
  5. "Drone footage shows ambush on Russian tanks resulting in death of the commander". AS.com (in ஆங்கிலம்). 2022-03-10. பார்க்கப்பட்ட நாள் 2022-03-12.
  6. IANS (2022-03-12). "Russia disables Ukraine military's main radio intelligence facility". Business Standard India. https://www.business-standard.com/article/international/russia-disables-ukraine-military-s-main-radio-intelligence-facility-122031200444_1.html. 
  7. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோவரி_போர்&oldid=3401812" இலிருந்து மீள்விக்கப்பட்டது