உள்ளடக்கத்துக்குச் செல்

புரோமால் நீரேற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமால் நீரேற்று
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,2,2-முப்புரோமோ-1,1-ஈத்தேண்டையால்
வேறு பெயர்கள்
முப்புரோமோயெத்திலிடின் கிளைக்கால்
இனங்காட்டிகள்
507-42-6
ChemSpider 61488
EC number 208-073-2
InChI
  • InChI=1S/C2H3Br3O2/c3-2(4,5)1(6)7/h1,6-7H
    Key: NJHVMXFNIZTTBV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68181
  • C(C(Br)(Br)Br)(O)O
UNII BQU83Q7216
பண்புகள்
C2H3Br3O2
வாய்ப்பாட்டு எடை 298.76 g·mol−1
தோற்றம் வெண்மையான படிகத் திண்மம், புரோமால்-போன்ற மணமும் சுவையும் [1]
உருகுநிலை 53.5 °C (128.3 °F; 326.6 K)
கரையும்
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர், குளோரோபாரம் கிளிசரால் போன்றவற்றில் கரையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H315, H319, H335
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புரோமால் நீரேற்று (Bromal hydrate) என்பது C2H3Br3O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமபுரோமின் சேர்மமாகவும் குளோரால் நீரேற்றின் புரோமின் ஒப்புமையாகவும் வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் புரோமால் ஐதரேட்டு என்ற பெயராலும் அறியப்படுகிறது. புரோமல் தண்ணீருடன் வினைபுரியும் போது புரோமால் நீரேற்று உருவாகிறது. புரோமால் நீரேற்றை காய்ச்சி வடித்தால் புரோமாலாகவும் தண்ணீராகவும் சிதைவடையும்.[1] புரோமால் நீரேற்று அறிதுயில் மற்றும் வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது, ஆனால் குறைந்த அளவுகளில் ஓர் ஊக்கியாக இது செயல்படுகிறது.[3] புரோமால் நீரேற்று இதன் குளோரின் ஒப்புமையான குளோரால் நீரேற்றை விட உடலியல் ரீதியாக மிகவும் தீவிரமான செயல்பாட்டில் உள்ளது. இதய தசைகளில் இதன் நேரடி விளைவு குளோரால் நீரேற்றை விட வலிமையானதாகும்.[4] புரோமால் நீரேற்றின் வலி நிவாரணி விளைவுகள் புரோமோஃபார்மிற்கு முன்மொழியப்பட்ட வளர்சிதை மாற்றத்திற்குக் காரணமாகிறது.[5]

வலிப்பு நோய்க்கான மருந்தாகவும் புரோமால் நீரேற்று முயற்சிக்கப்பட்டது. ஆனால் பலனளிக்கவில்லை.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 BROMAL – BROMAL HYDRATE, Stillé, A., Maisch, J. M. (1884). The National Dispensatory: Containing the Natural History, Chemistry, Pharmacy, Actions, and Uses of Medicine. Including Those Recognized in the Pharmacopoeias of the United States, Great Britain, and Germany, with Numerous References to the French Codex. H.C. Lea.
  2. "Bromal hydrate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  3. Bromal Hydrate (page 53), Cerna, D. (1894). Notes on the newer remedies. USA: W.B. Saunders.
  4. BENNETT, J. H. (1875). Researches into the Antagonism of Medicines; being the report of the Edinburgh Committee of the British Medical Association ... Reprint from the British Medical Journal. J.&A. Churchill.
  5. Bromal Hydrate, E. Steinauer (1871)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமால்_நீரேற்று&oldid=4084939" இலிருந்து மீள்விக்கப்பட்டது