உள்ளடக்கத்துக்குச் செல்

புரோப்பைல் காலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோப்பைல் காலேட்டு
Propyl gallate
Structural formula of propyl gallate
Space-filling model of the propyl gallate molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோப்பைல் 3,4,5-மூவைதராக்சிபென்சோயேட்டு, டிரையைதாக்சி பென்சோயேட்டு
வேறு பெயர்கள்
காலிக் அமிலம், புரோப்பைல் எசுத்தர்
என்-புரோப்பைல் காலெட்டு
ஐ310
இனங்காட்டிகள்
121-79-9 Y
ChEMBL ChEMBL7983 Y
ChemSpider 4778 Y
EC number 204-498-2
InChI
  • InChI=1S/C10H12O5/c1-2-3-15-10(14)6-4-7(11)9(13)8(12)5-6/h4-5,11-13H,2-3H2,1H3 Y
    Key: ZTHYODDOHIVTJV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C10H12O5/c1-2-3-15-10(14)6-4-7(11)9(13)8(12)5-6/h4-5,11-13H,2-3H2,1H3
    Key: ZTHYODDOHIVTJV-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த புரோப்பைல்+காலேட்டு
பப்கெம் 4947
  • O=C(OCCC)c1cc(O)c(O)c(O)c1
UNII 8D4SNN7V92 Y
பண்புகள்
C10H12O5
வாய்ப்பாட்டு எடை 212.20 கி/மோல்
தோற்றம் வெண்மையான படிகத் திண்மம்
உருகுநிலை 150 °C (302 °F; 423 K)
கொதிநிலை சிதைவடையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

புரோப்பைல் காலேட்டு (Propyl gallate) என்பது C10H12O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தை 3,4,5-மூவைதராக்சிபென்சோயேட்டு, 3,4,5-டிரையைதராக்சிபென்சோயேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கலாம். காலிக் அமிலம் மற்றும் புரோப்பனால் ஆகிய சேர்மங்கள் சேர்ந்து ஒடுக்கவினை மூலம் இந்த எசுத்தரை உருவாக்குகின்றன. ஆக்சிசனேற்றத்திலிருந்து உணவுகளைப் பாதுகாக்க 1948 ஆம் ஆண்டு முதல் எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ளடக்க உணவுப் பொருட்களுடன் உணவு சேர்க்கைப் பொருளாக இந்த எதிராக்சிகரணி சேர்க்கப்பட்டு வருகிறது[1]. ஓர் உணவு சேர்க்கைப் பொருளாக ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ310 என எண்ணிடப்பட்டு இது அடையாளப்படுத்தப்படுகிறது.

விளக்கம்

[தொகு]

புரோப்பைல் காலேட்டு ஓர் எதிராக்சிகரணியாகும். ஐதரசன் பெராக்சைடு மற்றும் ஆக்சிசன் தனி உறுப்புகள் போன்றவற்றினால் உணவுப்பொருள்கள் ஆக்சிசனேற்றமடைவதை இச்சேர்மம் தடுக்கிறது.

பயன்கள்

[தொகு]

உணவுப்பொருள்களில் உள்ள எண்ணெய் மற்றும் கொழுப்பு போன்ற சத்துகள் ஆக்சிசனேற்றமடையாமல் தடுக்க இதைப் பயன்படுத்துகிறார்கள். உணவு, அழகுசாதனப் பொருட்கள், தலைமுடி சார்ந்த பொருட்கள், பிசின்கள், உயவுப்பொருட்கள் போன்றவற்றில் புரோப்பைல் காலேட்டைப் பயன்படுத்துகிறார்கள்.

எதிராக்சிகரணி மற்றும் மும்மைநிலை தணிப்பியாக ஒளி நுண்ணோக்கியியலில் இது பயன்படுகிறது[2].

உயிரிய விளைவுகள்

[தொகு]

கொறித்துத் தின்கிற பிராணிகளான கொறிணிகளிடத்தில் புரோப்பைல் காலெட்டு சிறிதளவு அல்லது எந்தவிதமான புற்றுநோய் விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று 1993 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது[3].

புரோப்பைல் காலேட்டு ஒரு ஈசுட்ரோசன் எதிர்ப்பி என்று 2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது[4].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Final Report on the Amended Safety Assessment of Propyl Gallate". International Journal of Toxicology 26 (suppl. 3): 89–118. 2007. doi:10.1080/10915810701663176. பன்னாட்டுத் தர தொடர் எண்:1091-5818. பப்மெட்:18080874. 
  2. Jerker Widengren; Andriy Chmyrov; Christian Eggeling; Per-Åke Löfdahl; Claus A. M. Seidel (2007). "Strategies to Improve Photostabilities in Ultrasensitive Fluorescence Spectroscopy". The Journal of Physical Chemistry A 111 (3): 429–440. doi:10.1021/jp0646325. பப்மெட்:17228891. 
  3. Hirose, Masao, et al. "Modification of carcinogenesis by α-tocopherol, t-butylhydro-quinone, propyl gallate and butylated hydroxytoluene in a rat multi-organ carcinogenesis model." Carcinogenesis 14.11 (1993): 2359-2364.
  4. Alessio Amadasi; Andrea Mozzarelli; Clara Meda; Adriana Maggi; Pietro Cozzini (2009). "Identification of Xenoestrogens in Food Additives by an Integrated in Silico and in Vitro Approach". Chem. Res. Toxicol. 22 (1): 52–63. doi:10.1021/tx800048m. பப்மெட்:19063592. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோப்பைல்_காலேட்டு&oldid=2730847" இலிருந்து மீள்விக்கப்பட்டது