புரா மெதுவே கரங், வடக்கு பாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புரா மெதுவே கரங்கின் முதன்மைக் கோயிலில், வடக்கு பாலியில் காணப்படுகின்ற பொதுவான மலர் அலங்காரம்

புரா மெதுவே கரங் அல்லது பூரா மடுவே கரங் என்பது இந்தோனேசியாவில் வடக்கு பாலியில், புலேலங்க் ரீஜென்சியில் சிங்கராஜாவிற்கு</a> கிழக்கே 12 கி.மீ. உள்ள குபுதம்பஹான் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பாலினிய கோயில் ஆகும். அளவினை வைத்து நோக்கும்போது இது பாலியின் கொள்கை அடிப்படையில் அமைந்த கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது, [1] வட பாலிக்கு உரித்தான சிலைகள், ஆபரண அழகு மற்றும் அலங்காரங்கள் ஆகிய அலங்கார சிறப்பியல்புகளுக்கு புகழ் பெற்றது. [1]

கோயில் வளாகம்[தொகு]

கோயில் வளாகத்தின் முன்புறத்தில் ராமாயண சிற்பங்களின் அணிவகுப்பு.

புரா மெதுவே கரங் (பலினீஸ் "(இறைவன்) நில உரிமையாளரின் கோயில்") 1890 ஆம் ஆண்டில் அழிந்துபோன பாலினிய கிராமமான புலியனில் இருந்து குபுதாம்பஹானுக்கு குடி புகுந்த மக்களால் கட்டப்பட்டது. இந்த கோயில் படாரா மெதுவே கராங்கிற்கு ("நிலத்தை வைத்திருக்கும் இறைவன்") அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். அந்த இறைவன் விவசாய நிலத்தின் வளத்தை பாதுகாக்கும் கடவுளாகக் கருதப்படுகின்றார். புரா மெதுவே கரங்கில் சூரியக் கடவுளான சூர்யா மற்றும் அன்னை பூமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சன்னதிகளும் உள்ளன, இவை அனைத்தும் நிலத்தின் வளத்தை பாதுகாக்கும் கருத்துடன் தொடர்பு உடையவையாக அமைந்துள்ளன. கோயில் வளாகம் சுவர்களால் சூழப்பட்டுள்ளது, இது செதுக்கப்பட்ட மலர் அலங்காரத்துடன் உள்ளது. ஆங்காங்கே தூண்களைக் கொண்டு இடைவெளியுடன் அமைந்துள்ளது. [2] [3]

கோயிலின் நுழைவாயிலில் இந்தியக் காவிய ராமாயணத்தின் கதாபாத்திரங்களைக் குறிக்கும் 36 கல் உருவங்களின் அணிவகுப்பு காணப்படுகிறது. இந்த சிற்பங்கள் மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டுள்ளன, கீழ் வரிசையில் 13 உருவங்கள், நடுத்தர வரிசையில் பத்து உருவங்கள், மற்றும் பின்புறத்தில் மிக உயர்ந்த வரிசையில் 13 உருவங்கள் காணப்படுகின்றன. இது இரண்டு நுழைவு படிக்கட்டுகளைக் கொண்டு காணப்படுகிறது. மையத்தில் கும்பகர்ணன் உள்ளார். அவரைச் சுற்றி சுக்ரிவாவின் குரங்குப் படைகள் உள்ளன. இரட்டை படிக்கட்டுகள் வழியாக மொட்டை மாடியாக உள்ள மேல் தளத்திற்குச் ( ஜபா பூரா ) செல்ல முடியும். அங்கே ஒரு பிளவு வாயில் உள்ளர். அதுதான் ஜாபா பிசான் எனப்படுகின்ற கோயிலின் கருவறையின் வெளிப்புறம் ஆகும். [1]

வெளிப்புற கருவறை முக்கியமாக மத திருவிழா கொண்டாட்டத்தின் போது நிகழ்கின்ற கூட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த முற்றத்தில் ஒரு பெவிலியன் உள்ளது, இது சில நிகழ்வுகளின் போது கேமலன் நிகழ்ச்சி நடத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. [2]

நடுத்தர கருவறைக்கு ( ஜபா தெங்கா ) வெளி கருவறையிலிருந்து நான்கு அடுக்கு பெந்தர் பிளவு நுழைவாயில் வழியாக அடைய வசதி உள்ளது. நடுத்தர கருவறையில் சமச்சீரான அளவில் இரண்டு பெவிலியன்களின் தொகுப்பு காணப்படுகிறது. [1]

பூராவின் மிகவும் புனிதமான மண்டலமாக உள் கருவறை ( ஜீரோ ) கருதப்படுகிறது. அதற்கு நடுத்தர கருவறையிலிருந்து மற்றொரு பிளவு நுழைவாயில் வழியாக அடையலாம். அங்கிருந்து சென்றால்உள் கருவறையின் மிக உயர்ந்த இடத்தை அடைய முடியும். இந்த மிக உயர்ந்த இடத்தில் பெத்தாரா லுஹூர் இங் அங்காசா சன்னதி உள்ளது. இந்த கோயில் பாலினிய புராணக்கதைகளின் அடிப்படையிலான சுவர் சிற்பங்களைக் கொண்டு அமைந்துள்ளது. முதன்மைச் சன்னதியின் இரு புறங்களிலும், அதாவது அதன் இடது மற்றும் வலதுபுறங்களில் இரண்டு சிவன் கோயில்களைக் கொண்டு அமைந்துள்ளது. ஒன்று ரத்து ஆயு சரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது (தாய் பூமியின் இபு பிர்திவியின் வெளிப்பாடு ). மற்றொன்று ரத்து நுகுரா சரிக்கு (பூமியின் விளைபொருட்களைப் பாதுகாப்பவர்). அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [1]

புடைப்புச் சிற்பங்கள்[தொகு]

முதன்மைச் சன்னதியின் பக்கத்தில் ஒரு மேற்கத்தியர் சைக்கிளில் சவாரி செய்வதைப் போன்ற உருவம் காணப்படுகிறது. அந்த உருவம் 1904 ஆம் ஆண்டில் பாலியை தனது மிதிவண்டியுடன் ஆராய்ந்த டச்சு கலைஞரான டபள்யூ. ஓ.ஜே. நியுவென்காம்பின் புடைப்புச்சிற்பம் ஆகும். [2] இது மட்டுமே ஒரு பாலினியக் கோயிலில் ஒரு மேற்கத்தியரின் சித்தரிப்பு மட்டுமல்ல. இத் தவிர சிங்கராஜாவின் கிழக்கே ஜாகராகாவின் புரா டேலத்தில், தாடியைக் கொண்டுள்ள வெளிநாட்டினர்களால் இயக்கப்படும் ஒரு கார் ஒரு ரிவால்வர் ஆயுதம் ஏந்திய ஒரு குண்டர்களால் சிறைபிடிக்கப்பட்டிருப்பதைப் போன்ற தோற்றத்தில் சுட்டுகிறது. வடக்கு பாலியின் கோயில்களில் சர்வதேச அளவில் செல்வாக்கு செலுத்திய பல புடைப்புச் சிற்பங்களுக்கு காரணம், இது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாலி தீவின் நுழைவாயிலாக இருந்ததே ஆகும். 1917 ஆம் ஆண்டு பூகம்பத்தில் மோசமாக சேதமடைந்த இந்த புடைப்புச் சிற்பம் மறுசீரமைப்புப் பணியின் போது சிறிது மாற்றம் பெற்றதால், சைக்கிள் சிற்பத்தில் உள்ள மனிதன் அசல் நிலையில் இல்லாததது போன்ற தோற்றம் காணப்படுகிறது. மறுசீரமைப்பின்போது முன்பிருந்த புடைப்புச்சிற்பத்தில் அதிக மலர் அலங்காரத்தைச் சேர்த்துள்ளதைக் காணமுடிகிறது. [3] [4]

மற்றொரு புடைப்புச்சிற்பமாக மகிசாசுரமர்த்தினியாக உள்ள துர்க்கையைக் காணலாம்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Auger 2001, பக். 148-9.
  2. 2.0 2.1 2.2 Auger 2001.
  3. 3.0 3.1 "Sejarah dan Keunikan Pura Maduwe Karang". Blogpost (May 2015). மூல முகவரியிலிருந்து November 20, 2016 அன்று பரணிடப்பட்டது.
  4. "PURA MEDUWE KARANG". Sunda Spirit (2016).