புராணா புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புராணா புல்
போக்குவரத்து பாதசாரிகள்
தாண்டுவது முசி ஆறு
மொத்த நீளம் 600 அடி
அகலம் 35 அடி

புராணா புல் ( Purana pul ) ( ஆங்கிலத்தில் பழைய பாலம் என்று பொருள்) என்பது கி.பி 1578 இல் கட்டப்பட்ட ஒரு பாலமாகும். இது இந்திய மாநிலமான தெலங்காணாவின் , ஐதராபாத்தில் உள்ள முசி ஆற்றில் மேல் அமைந்துள்ளது. மேலும், இது ஐதராபாத்தில் கட்டப்பட்ட முதல் பாலமாகவும் [1] தென்னிந்தியாவின் மிகப் பழமையான ஒன்றாகவும் இருக்கிறது.

இது, கோல்கொண்டா மற்றும் ஐதராபாத்தை இணைக்க குதுப் ஷாஹி காலத்தில் காலத்தில் கட்டப்பட்டது. இந்தப் பாலம் இப்போது செயல்படவில்லை. இது காய்கறி சந்தையாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஐதராபாத்தின் பழமையான அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. [2] 1908 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முசி வெள்ளத்திற்குப் பிறகு எஞ்சியிருக்கும் ஒரே பாலம் இதுவாகும்.

வரலாறு[தொகு]

இளவரசர் முகம்மது குலி குதுப் ஷா முசி ஆற்றின் மறுபுறத்தில் வசித்து வந்த பாகமதி என்ற இந்து பெண்ணை காதலித்து வந்தார். அவரது தந்தை சுல்தான் இப்ராஹிம் குலி குதுப் ஷா தனது மகன் ஆற்றைக் கடக்கக் கூடிய வகையில் பாலம் கட்ட முடிவு செய்தார். இந்த காரணத்திற்காக, இது 'பியார்-அனா புல்' ( ஆங்கிலத்தில் 'ஆன் லவ் பிரிட்ஜ்' என்று பொருள்) என்றும் அழைக்கப்பட்டது. [3] [4]

பாலம்[தொகு]

இந்தப் பாலம் 22 வளைவுகளைக் கொண்டுள்ளது. மேலும், 600 அடி நீளமும் 35 அடி அகலமும் ஆற்றின் படுக்கைக்கு 54 அடி உயரமும் கொண்டது. [5] 400 ஆண்டுகள் பழமையான இந்த அமைப்பு இன்னும் அப்படியே உள்ளது. 1820இல் சற்று சேதமடைந்தது. அப்போதைய நவாப் சிக்கிந்தர் ஷா இதை சரிசெய்தார். 1908இல் வெள்ளம் இதை பாதித்தப் பின்னர், ஒரு சிறிய பகுதி சரிசெய்யப்பட்டது. இதன் அருகில் ஒரு சிறிய மியா மிஷ்க் பள்ளிவாசல் உள்ளது.

இந்த கட்டிடத்தை பல வெளிநாட்டினர் பார்வையிட்டனர். நிசாம்களின் காலத்தில் ஐதராபாத்திற்கு வருகை புரிந்த பிரெஞ்சு பயணி டேவர்னியர், பாலத்தின் கட்டடக்கலை பாணியில் ஈர்க்கப்பட்டார். அவர் இதை பாரிஸில் உள்ள பாண்ட் நுஃப் பாலத்துடன் ஒப்பிட்டார்.

புராண புல் தர்வாசா[தொகு]

பாலத்தின் முடிவில் புராண புல் தர்வாசா என்ற நுழைவாயில் உள்ளது. நகரச் சுவரால் மூடப்பட்டிருந்த ஐதராபாத்து நகரத்தின் எஞ்சியிருக்கும் இரண்டு நுழைவாயில்களில் இதுவும் ஒன்றாகும். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.encyclopedia.com/topic/Hyderabad.aspx#1
  2. Harriet Ronken Lynton, Mohini Rajan (1974). The days of the beloved. university of California. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-02442-7. https://books.google.com/books?id=DhYjiciXlwwC. பார்த்த நாள்: 22 September 2011. 
  3. "Hyderabad History - Old Kingdoms to modern times. Illustrated with Maps & Photos". Archived from the original on 2011-05-09. பார்க்கப்பட்ட நாள் 2021-05-12.
  4. Bilgrami. Landmarks of the Deccan: A Comprehensive Guide to the Archaeological Remains of the City and Suburbs of Hyderabad. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120605435. https://books.google.com/books?id=wgo97XF0XuYC. 
  5. "Puranapul Puranapul Hyderabad - Total Hyderabad". Archived from the original on 28 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 October 2011.
  6. "Ancient walls, temples in Hyderabad get facelift". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-26.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Purana pul
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புராணா_புல்&oldid=3564207" இலிருந்து மீள்விக்கப்பட்டது