புனோம் பென் ராயல் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 11°34′21″N 104°55′00″E / 11.5725°N 104.9167°E / 11.5725; 104.9167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனோம் பென் தொடருந்து நிலையம்
Phnom Penh Royal Railway Station
2012 இல் புனோம் பென் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்புனோம் பென், கம்போடியா.
ஆள்கூறுகள்11°34′21″N 104°55′00″E / 11.5725°N 104.9167°E / 11.5725; 104.9167
நடைமேடை2
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1932
மறுநிர்மாணம்2010 (புதுப்பித்தல்)
மின்சாரமயம்இல்லை
போக்குவரத்து
பயணிகள் 0
0
சேவைகள்
இல்லை
புதுப்பித்தலுக்கு முன்பு 2004 இல் தொடருந்து நிலைய நடைபாதை
ஒரு மழை நாளில் தொடருந்து நிலையம்

புனோம் பென் ராயல் தொடருந்து நிலையம் (Phnom Penh Royal Railway Station) என்பது கம்போடியாவின் புனோம் பென் நகரில் இருக்கும் ஒரு தொடருந்து நிலையம் ஆகும். சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், தேசிய மேலாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் கனடியத் தூதரகம் ஆகியனவற்றுக்கு அடுத்ததாக இத்தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. பிப்ரவரி 2014 நிலவரப்படி இங்கொன்றும் அங்கொன்றுமாக அவ்வப்போது சரக்கு, குறிப்பாக எண்ணெய் ஏந்தித் தொட்டிகள் போக்குவரத்து மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்தது. 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 22 இல் இந்நிலையம் புதுப்பிக்கப்பட்டு முறையாகத் திறக்கப்பட்டிருந்தது. பயணிகள் போக்குவரத்து இல்லாத காரணத்தால், நிலையக் கட்டிடங்களும் நடைமேடைகளும் பொதுமக்களால் பயன்படுத்தப்படாமல் இருந்தன.

கட்டிட அமைப்பு[தொகு]

1932 ஆம் ஆண்டிலேயே இந்நிலையம் வலுவூட்டப்பட்ட காங்கீறீற்று[1] கட்டுமானத்தால் கட்டப்பட்டிருந்தது. பட்டாம்பாங் நிலையத்திற்காக தொடருந்து சேவை வழங்க இந்நிலையம் கட்டப்பட்டது.

வரலாறு[தொகு]

1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 - செப்டம்பர் 30 தேதிகளில் கம்போடிய மக்கள் புரட்சிக்கட்சியின் (க.ம.பு.க) யின் இருபத்தியோரு தலைவர்கள் கூடி இந்நிலையத்தில் இரகசிய மாநாடு ஒன்றை நடத்தினர்.[2][3] கூட்டத்தின் முடிவில் இக்கட்சி கம்போடியாவின் தொழிலாளர் கட்சி என்று பெயர் மாற்றம் கண்டது. மக்களாட்சிக் கம்போடியாவின் முக்கியமான இக்கூட்டம் நடைபெற்ற நாளானது பின்னர் கட்சி நிறுவப்பட்ட நாள் என அடையாளப்படுத்தப்பட்டது.[4] புனோன் பென்னின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பொல் பொட் உள்ளிட்ட கெமர் ரூச் தலைவர்களின் முதலாவது முக்கியக் கூட்டம் 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இங்குதான் நடந்தது. நகரங்களை விட்டு வெளியேறுவது தொடர்பான முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "INFORMATION FOR VISITORS". National Museum of Cambodia. பார்க்கப்பட்ட நாள் 4 February 2011.
  2. Osborne, p. 124
  3. "Chronologie du Cambodge de 1960 à 1990". Archived from the original on 2007-04-22. பார்க்கப்பட்ட நாள் 2016-01-07.
  4. Chandler, David P., Revising the Past in Democratic Kampuchea: When Was the Birthday of the Party?: Notes and Comments, in Pacific Affairs, Vol. 56, No. 2 (Summer, 1983), pp. 288-300.
  5. Osborne, p. 149
  6. Sheridan, Michael (2004-10-24). "War: Pol Pot by Philip Short". The Times. பார்க்கப்பட்ட நாள் 5 February 2011.

குறிப்புரை[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Phnom Penh train station
என்பதில் ஊடகங்கள் உள்ளன.