புனித ஜோசப் தேவாலயம், மன்நானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புனித ஜோசப் தேவாலயம்
9°38′49.6″N 76°31′10.2″E / 9.647111°N 76.519500°E / 9.647111; 76.519500ஆள்கூறுகள்: 9°38′49.6″N 76°31′10.2″E / 9.647111°N 76.519500°E / 9.647111; 76.519500
அமைவிடம்மன்நானம்
நாடுஇந்தியா
சமயப் பிரிவுசிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம்
நிருவாகம்
Districtகோட்டயம்

மன்நானம் புனித ஜோசப் தேவாலயம் என்பது கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில், மன்நானத்தில் அமைந்துள்ள ஒரு சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இந்த தேவாலயம் புனித குரியகோஸ் எலியாஸ் சாவறாவால் ஒரு மலை உச்சியில் கட்டப்பட்டது மற்றும் அவரது திருஉடல் எச்சங்கள் தேவாலயத்தில் பாதுகாப்பட்டுள்ளது. [1]

தேவாலயத்தின் வரலாற்றை விவரிக்கும் பட்டையம்

யாத்திரை மையம்[தொகு]

புனித குரியகோஸ் எலியாஸ் சாவறாவைப் பின்பற்றுபவர்களுக்கு இந்த தேவாலயம் ஒரு முக்கியமான யாத்திரை மையமாகும். தேவாலயப் பணிகள் அவரால் 11 மே 1831 இல் துவக்கபட்டு 1837 இல் நிறைவடைந்தது. இதன் பின்னர் 1955 மற்றும் 1996 இல் புதுப்பிக்கப்பட்டது. தேவாலய வளாகத்தில் துறவிகளுக்கான குடியிருப்பு பிரிவும் உள்ளது. [2]

புனித குரியகோஸ் 1846 ஆம் ஆண்டில் தேவாலய வளாகத்தில் கோட்டயத்தின் முதல் அச்சகத்தை தொடங்கினார். முதல் மலையாள நாளேடான நஸ்ரானி தீபிகாவை வெளியிட அச்சகம் பயன்படுத்தப்பட்டது. 1871 இல் புனித குரியகோஸ் இறந்தபோது, கூனம்மாவு புனித பிலோமினா தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது உடல் எச்சங்கள் பின்னர் 1889 இல் புனித ஜோசப் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டன. [3] [4]

குறிப்புகள்[தொகு]

  1. "St. Joseph's Monastery, Mannanam". Kerala Tourism. மூல முகவரியிலிருந்து 9 January 2017 அன்று பரணிடப்பட்டது.
  2. "Believers throng Mannanam hill". Deccan Chronicle. மூல முகவரியிலிருந்து 9 January 2017 அன்று பரணிடப்பட்டது.
  3. "Two Kerala-born Indian Catholics to be declared as saints in Vatican". Indian Express. மூல முகவரியிலிருந்து 7 November 2016 அன்று பரணிடப்பட்டது.
  4. "Two more Indian native Saints to invigorate Faith of the local Catholic Church". Vatican Radio. மூல முகவரியிலிருந்து 9 January 2017 அன்று பரணிடப்பட்டது.