புந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

புந்தி
வாழை இலையில் பரிமாரப்படும் புந்தி
வகைஅரிசிக் கொழுக்கட்டை
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதுளு நாடு, கருநாடகம்
முக்கிய சேர்பொருட்கள்நெல்

புந்தி (Pundi) அல்லது புண்டி கட்டி என்பது பொதுவாக உருண்டை வடிவ மென்மையான அரிசி கொழுக்கட்டை உணவாகும்.[1] இந்தியாவின் துளு நாடு பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட மங்களூர் சமையல் வகை இதுவாகும். புந்தி அரிசியை ஊறவைத்து, அரைத்து, பதப்படுத்தி, சமைத்து, இறுதியாக ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கப்படுகிறது. புண்டி கட்டி கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மற்றும் மங்களூர் நகரங்களில் பூண்டி என்று பிரபலமாக அறியப்படுகிறது.[2][3] பெரும்பாலான மங்களூர் காலை உணவு வகைகளைப் போலவே தேங்காய் சட்னியுடன் புந்தி பரிமாறப்படுகிறது.

இது வெல்லம் மற்றும் தேங்காய்த் துருவல் கலந்தும் செய்யப்படுகிறது. இது துளுவில் சீப் பூண்டி என்று அழைக்கப்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

கொத்தமல்லி சட்னியுடன் பூண்டி கட்டி

மேற்கோள்கள்[தொகு]

  1. Raghuram, M (26 June 2013). "Rain brings festive atmosphere to Coorg". பார்க்கப்பட்ட நாள் 5 November 2016.
  2. "Pundi Gatti | Rice Dumpling Recipe - Udupi Recipes". 2014-09-30. http://udupi-recipes.com/2014/09/pundi-gatti-rice-dumpling-recipe.html. பார்த்த நாள்: 2016-11-02. 
  3. "Pundi (Rice dumplings) | Simmer to Slimmer". 2014-07-04. http://simmertoslimmer.com/pundi-rice-dumplings/. பார்த்த நாள்: 2016-11-02. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புந்தி&oldid=3856655" இலிருந்து மீள்விக்கப்பட்டது