புத்தபாலிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புத்தபாலிதர் (Buddhapālita) (கிபி 470–550 ) மகாயான பௌத்த அறிஞர்களான நாகார்ஜுனர் மற்றும் ஆரியதேவர் எழுதிய நூல்களின் உரையாசிரியர் ஆவார். இவரது சமகாலத்தில் வாழ்ந்த பாவவிவேகர் என்ற மகாயான பௌத்த அறிஞர், புத்தபாலிதரின் படைப்புகளை கடுமையாக விமர்சித்தவர். சந்திரகீர்த்தி என்ற பௌத்த அறிஞர், புத்தபாலிதரின் கருத்துக்களை தீவிரமாக ஆதரித்தவர்.

இவர் மகாயான பௌத்தத்தின் பிரசங்கிகா அமைப்பின் பெரும் அறிஞர் ஆவார். தென்னிந்தியாவைச் சேர்ந்த இவர் நாலாந்தா பல்கலைக்கழகத்தில், ஆச்சாரியர் சங்கரக்சிதர் மற்றும் நாகமித்திரர் ஆகியவர்களின் சீடராக பௌத்த தத்துவம் மற்றும் இலக்கியங்களைப் பயின்றவர்.

பின்னர் தென்னிந்தியாவின் தந்தபுரி விகாரையில் தங்கி, ஆரியதேவர் மற்றும் நாகார்ஜுனரின் படைப்புகளுக்கு உரை எழுதியவர். நாகார்ஜுனரின் மூலசர்வாஸ்திவாதம் (அடிப்படை ஞானம்) எனும் நூலிற்கு, புத்தபாலிதர் எழுதிய மூலமத்தியமகவிருத்தி உரை நூல் புகழ்பெற்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Buddhapalita's Mulamadhyamakavrtti
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தபாலிதர்&oldid=2712221" இலிருந்து மீள்விக்கப்பட்டது