புக்கிட் தீமா
புக்கிட் தீமா | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 武吉知马 |
• மலாய் | Bukit Timah |
• ஆங்கிலம் | Bukit Timah |
நாடு | சிங்கப்பூர் |
புக்கிட் தீமா | |
---|---|
சிங்கப்பூரின் மிக உயர்ந்த உச்சியான புக்கிட் தீமா. | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 163.63 m (536.8 அடி) |
புடைப்பு | 163.63 m (536.8 அடி) |
பட்டியல்கள் | நாட்டின் உயரமான புள்ளி |
பெயரிடுதல் | |
மொழிபெயர்ப்பு | "Tin-bearing hill" |
பெயரின் மொழி | மலாய் |
புவியியல் | |
நிலவியல் | |
மலையின் வகை | Hill |
புக்கித் தீமா (Bukit Timah) என்பது சிங்கப்பூரின் பிரதானமான மையத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதியாகும். அங்கு 166.63 மீட்டர் உயரமுள்ள (537 அடி) ஒரு குன்று இருக்கிறது. சிங்கப்பூர் நகரத்தின் மிக உயரமான இயற்கை புள்ளி இதுவேயாகும்.
இந்தக் குன்றைச் சுற்றியுள்ள பகுதிகள் நகர மறுசீரமைப்பு அதிகாரச் சபையின் கீழ் இயங்கும் புக்கிட் தீமா நகர்ப்புறத் திட்டமிடல் பகுதி எனப்படுகிறது. இந்தப் பகுதியானது, மைய வணிகப் பகுதியான மத்திய வர்த்தக மாவட்டத்தில் (Central Business District) இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தோ தக், யலான் யுரொங் கெச்சிலின் கிழக்குப் பகுதி புக்கிட் தீமா சாலை, ஆலண்டு சாலை மற்றும் சிகாட்சு சாலை முதலியன மைய வணிகப் பகுதியைச் சூழ்ந்து எல்லைகளாக உள்ளன.
பொது
[தொகு]சிங்கப்பூரில் புக்கிட் தீமா ஒரு விலையுயர்ந்த ஆடம்பரமான நகரமாகக் கருதப் படுகிறது. ஓய்வு பெற்ற மூத்த அமைச்சரான கோ சொக் தொங் உட்பட முன்னாள் குடியரசுத் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் இந்த சொகுசு நகரில் வீடுகள், வடிவமைக்கப்பட்ட வில்லாக்கள், ஆடம்பர பங்களாக்கள் மற்றும் கூட்டுரிமை வீடுகள் என மிக ஆடம்பரமாக இங்கு வசிக்கிறார்கள்.
சிங்கப்பூரின் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில் இப்பகுதியில் மிக அதிகமான தாவரங்கள் மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன. எனவேதான் இப்பகுதியில் புக்கிட் தீமா இயற்கைக் காப்பகம் அமைந்துள்ளது. இக்காப்பகம் 1883-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.[1]
புக்கிட் தீமா சொற்பிறப்பியல்
[தொகு]மலாய் மொழியில் வெள்ளீய மலை என்பது புக்கிட் தீமா என்பதன் பொருளாகும். புக்கிட் தீமா என்ற பெயர் 1828 ஆம் ஆண்டிலேயே பிராங்கின் மற்றும் யாக்சன் என்பவர்களால் வரைபடத்தில் அடையாளப்படுத்தப்பட்டது. கிரான்யி நதியின் கிழக்கு மூலத்தில் வடமேற்குப் பகுதியை நோக்கிய இரண்டு மலைகளாக வரைபடத்தில் இது சித்தரிக்கப்பட்டு இருந்தது.
தீவினுடைய உட்புறப்பகுதிகள் அந்நேரத்தில் முழுமையாகக் கண்டறியப்படாமல் இருந்ததால், வரைபடத்தில் குறிப்பதற்கான இதன் இருப்பிடம் மற்றும் பெயர் முதலியன அனேகமாக மலாய் சமூதாயத்தினரிடம் இருந்தே வந்திருக்க வேண்டும்.
வரலாறு
[தொகு]வெள்ளீய மலை என்ற பெயருக்கும் புக்கிட் தீமா என்ற பெய்ருக்கும் எந்த தொடர்பும் இல்லை. மலாய் மொழியில் இம்மலையின் அசலான பெயர் புக்கித் தெமாக் என்பதாகும். புக்கிட் தீமா என்பது தெமாக் வகை மரங்களின் உச்சியைக் குறிப்பதாகும்.
இவ்வகை மரங்கள் மலைச் சரிவுகளில் அதிகமாக வளரும். மேற்குப் பகுதியில் இருப்பவர்களால் தெமாக் என்ற விவரிப்பு தீமா என்று எடுத்துக் கொள்ளப்பட்டதால் புக்கிட் தீமா என்ற இப்பெயர் வந்தது. பாத்திமா என்ற மலாய்ப் பெண்ணின் பெயர் சுருக்கமே தீமா என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள்
மலை உச்சி வரையில் வண்டிவழிச் சாலை
[தொகு]1843-ஆம் ஆண்டில் வண்டிவழிச் சாலையொன்று மலையின் உச்சி வரைக்கும் அமைக்கப்பட்டது. பார்வையாளர்களுக்காக சில நாற்காலிகள் கொண்ட ஒரு குடிசையும் அமைக்கப்பட்டது. தரைப் பகுதிகளை விட தூய்மையான குளிர்ந்த காற்று மலைமீது வீசுவதால் இப்பகுதியை மிகச்சிறந்த சுகவாசத்தலம் என்று கருதினர்.
புக்கிட் தீமாவின் மலாய் பெயர் தமிழ் மொழியில் ஈயமலை என்று பெயரால் அழைக்கப்பட்டது. சிலர் இதை சிங்கப்பூர் விளையாட்டுக் கழகத்தின் ஒரு பொருளுடைய பெயராகவும் கருதினார்கள். பண்டைய நாட்களில் இங்கு மக்கள் பெரும் திரளாகக் கூடுவார்கள். இலவசமாக அரசர்கலின் விளையாட்டை கண்டு களிப்பார்கள். இப்பொழுது இவ்விடம் பரேர் பூங்கா எனப்படுகிறது. முன்னர் போல பொதுமக்களுக்காக அனுமதிக்கப் படாமல் மூடப்பட்டு உள்ளது.
புலிகளின் நடமாட்டம்
[தொகு]வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் 25 கிலோமீட்டர் நீளமுள்ள புக்கிட் தீமா சாலை சிங்கப்பூரின் மிகநீளமான சாலையாக கருதப்படுகிறது. மலையில் இருந்து கிரான்யியை நோக்கிச் செல்லும் இப்பாதை 1845-இல் அமைக்கப்பட்டது.
இப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் இருந்ததால் பொதுமக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை அளித்தது. 1860-ஆம் ஆண்டில் பதச்சாறு மற்றும் மிளகு நடவுக்குச் சென்றவர்களில் சுமார் 200 பேர் புலிகளால் கொல்லப்பட்டனர்.
1840-ஆம் ஆண்டில் புக்கிட் தீமா சாலையில் முதலாவது குதிரைச் சவாரி மேற்கொள்ளப்பட்டது. தாம்சன் மற்றும் டாக்டர் லிட்டில் இருவரும் நான்கு நாட்கள் இப்பயணத்தை மேற்கொண்டனர்.
தெக் கா காங் சாலை
[தொகு]தெக் கா காங் சாலை என்றும் புக்கிட் தீமா சாலை அழைக்கப்படுகிறது. இதன் பொருள் தெக் கா மாவட்டத்தில் உள்ள ஓடையின் பக்கம் என்பது பொருளாகும். இது புக்கிட் தீமா சாலையின் கீழ் முனையைக் குறிக்கிறது. வாயாங் சாது மற்றும் புக்கிட் தீமா கிராமங்கள் இதை வேறாக அழைக்கின்றன. ஒக்கியன் மொழி இச்சாலையை சியா லோ பியூ என்கிறது. இதன் பொருள் குதிரை வண்டி சாலையின் முடிவு என்பதாகும்.
இரண்டாம் உலகப்போரின் போது உள்நுழைந்த ஜப்பானியப் படைகளை கடைசியாக எதிர்த்துப் போராடிய இடத்திற்குச் சான்றாக இந்த புக்கிட் தீமா சாலை இருக்கிறது. ஆங்கிலேயர்கள் இறுதியாக 1942 [2] ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் நாளில் புக்கிட் தீமா சாலையை ஜப்பானியர்களிடம் இழந்தார்கள். எதிர்த்துப் போரிடுவதற்குத் தேவையான உணவும் தளவாடங்களும் தீவுக்குள் சிறிதளவே சேமிக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிதிருந்தார்கள்.
.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bukit Timah: It's a jungle out there! பரணிடப்பட்டது 2009-12-13 at the வந்தவழி இயந்திரம், Laura Senior, thinkexpats.com, accessed October 2009
- ↑ Japanese Invasion of Malaysia, accessed October 2009