புக்கராயசமுத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புக்கராயசமுத்திரம்
Bukkarayasamudram
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்புக்கராயசமுத்திரம்
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்22,000
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

புக்கராயசமுத்திரம் (Bukkarayasamudram) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். முதலாம் புக்கராயரின் பெயர் இக்கிராமத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.[2]

புவியியல் அமைப்பு[தொகு]

14.694444° வடக்கு 77.638056° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் புக்கராயசமுத்திரம் கிராமம் பரவியுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி புக்கராயசமுத்திரத்தின் மக்கள் தொகை 22000 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 11,034 பேர் ஆண்கள் மற்றும் 10,966 பேர் பெண்கள் ஆவர். 1000 ஆண்களுக்கு 994 பெண்கள் என்ற பாலின விகிதம் இங்கு நிலவுகிறது. ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 2,877 பேர் கிராமத்தில் இருந்தனர். அவர்களில் 1487 பேர் சிறுவர்கள் மற்றும் 1,390 பேர் சிறுமிகள் ஆவர். சிறுவர்களின் பாலின விகிதம் 1000 சிறுவர்களுக்கு 935 சிறுமிகள் என்ற நிலையில் இருந்தது. கல்வியறிவு பெற்றவர்கள் மொத்தமாக 11,824 பேர் அதாவது 61.83 சதவீதம் பேர் இங்கு வாழ்ந்தனர். மாநிலத்தின் கல்வியறிவு சதவீதமான 67.41% என்பதைவிட புக்கராயசமுத்திரத்தின் கிராமத்தின் கல்வியறிவு சதவீதம் அதிகமாகும்[1][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்த்த நாள் 14 October 2014.
  2. Bardi, Pietro (1 January 2002). Indian folklore research journal. National Folklore Support Centre. பக். 71. http://books.google.com/books?id=XkraAAAAMAAJ. பார்த்த நாள்: 13 March 2011. 
  3. "Literacy of AP (Census 2011)" (PDF). Official Portal of Andhra Pradesh Government. பார்த்த நாள் 14 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கராயசமுத்திரம்&oldid=2046584" இருந்து மீள்விக்கப்பட்டது