பீட்டராண்ட்ரெசெனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்டராண்ட்ரெசெனைட்டு
Peterandresenite
பொதுவானாவை
வகைஆக்சைடு, அறுநையோபேட்டு
வேதி வாய்பாடுMn4Nb6O19•14H2O
இனங்காணல்
நிறம்ஆரஞ்சு
படிக இயல்புபடிகங்கள் (சமபரிமணம்)
படிக அமைப்புஒற்றைச் சரிவச்சு
பிளப்புஏதுமில்லை
முறிவுசமமற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2-2.5
மிளிர்வுபளபளப்பு அல்லது பிசின்
கீற்றுவண்ணம்வெளிர் ஆரஞ்சு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் மற்றும் ஒளிகசியும்
அடர்த்தி3.05 (கணக்கிடப்பட்டது), 3.10 (அளவிடப்பட்டது) [கி/செ.மீ3]
மேற்கோள்கள்[1][2][3]

பீட்டராண்ட்ரெசெனைட்டு (Peterandresenite) என்பது Mn4Nb6O19•14H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய வகை கனிமமாகும்.[3] இயற்கையாக அறியப்பட்ட முதல் அறுநையோபேட்டு என்ற சிறப்புக்கு உரிய கனிமமாக இது அறியப்படுகிறது. இதன் கட்டமைப்பிலும் ஒரு சிறப்பு வகை இலிண்ட்குவிசுட்டு அயனி எண்முக அமைப்பு காணப்படுகிறது. நார்வே நாட்டிலுள்ள வெசுட்போல்டு மாகாணத்தின் இலார்விக்கு வளாகத்தின் பெக்மாடைட்டு பாறைகளில் பீட்டராண்ட்ரெசெனைட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[2] மற்ற தனித்தன்மை வாய்ந்த நியோபியம் தாதுக்களான ஆசுபெதமைட்டு மற்றும் மெனெசிசைட்டு போன்றதாகவும் கருதப்படுகிறது.[4][5]

தோற்றம்[தொகு]

நார்வே நாட்டின் வெசுட்போல்டு மாகாணத்தின் இலார்விக்கு நகரத்திற்கு அருகிலுள்ள திவெடலன் என்ற குக்கிராமத்தின் ஒரு கருங்கல் கட்டிடக் கற்கள் வெட்டி எடுக்கப்படும் இடத்தில் பீட்டராண்ட்ரெசெனைட்டு முதன்முதலில் கிடைத்தது.[2]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் பீட்டராண்ட்ரெசெனைட்டு கனிமத்தை Pan[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mineralienatlas
  2. 2.0 2.1 2.2 Friis, H., Larsen, A.O., Kampf, A.R., Evans, R.J., Selbekk, R.S., and Sánchez, A.A., 2014. Peterandresenite, Mn4Nb6O19·14H2O, a new mineral containing the Lindqvist ion from a syenite pegmatite of the Larvik Plutonic Complex, southern Norway. European Journal of Mineralogy 26, 567-576
  3. 3.0 3.1 "Peterandresenite: Peterandresenite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  4. "Aspedamite: Aspedamite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.
  5. "Menezesite: Menezesite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.
  6. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டராண்ட்ரெசெனைட்டு&oldid=3938257" இலிருந்து மீள்விக்கப்பட்டது