உள்ளடக்கத்துக்குச் செல்

பி. எம். சிறீகண்டையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. எம். சிறீகண்டையா (Belluru Mylaraiyya Srikantaiah; 3 சனவரி 1884- 5 சனவரி 1946) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த கன்னட எழுத்தாளர், நூலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர் மற்றும் பேராசிரியர் ஆவார். இவர் நவீன கன்னட இலக்கியத் தந்தை எனக் கருதப்படுகிறார்.[1] இவர் அறுபதுக்கும் மேற்பட்ட ஆங்கிலக் கவிதைகளை கன்னட மொழிக்கு மொழிப்பெயர்த்தார். 'கன்னடத பாவூடா' என்ற கவிதையில் கன்னடக் கொடி அல்லது கன்னடப் பதாகை என்னும் கருத்தாக்கத்தை வெளிப்படுத்தினார்.[2]

பிறப்பும் படிப்பும்

[தொகு]

கருநாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் சம்பிக் என்னும் ஊரில் பிறந்தார். சிறீரங்கப்பட்டனம், மைசூர் ஆகிய இடங்களில் கல்வி பயின்று, பெங்களூருவில் உள்ள கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் சென்னைக் கல்லூரியில் முதுவர் பட்டமும் பெற்றார்.[3]

பேராசிரியராக

[தொகு]

பி. எம். சிறீகண்டையா, மைசூர் மகாராசா கல்லூரயில் விரிவுரையாளராகச் சேர்ந்து 25 ஆண்டுகள் தொடர்ந்து பணி ஆற்றினார். பின்னர் பெங்களூருவில் சென்ட்ரல் கல்லூரியிலும் வேதரன்ய கல்லூரியிலும் பணி செய்தார். மைசூர் பல்கலைக் கழகத்தில் மதிப்புறு பேராசிரியராக இருந்தார்.

படைப்புகள்

[தொகு]
  • கடாயுத்த நாடகம்
  • அஸ்வத்தாமன்
  • ஒங்கன சுகலு

மொழிப்பெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கில கீத்தகலு(1921)
  • லீட் கைன்ட்லி லைட்
  • குறள் (1940)
  • சிலப்பதிகாரம்

இலக்கியத் திறனாய்வுகள்

[தொகு]
  • கன்னடிகரிகே ஒல்லேயே சாகித்யா
  • கன்னட கைப்பிடி (கன்னட இலக்கிய வரலாறு)

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எம்._சிறீகண்டையா&oldid=3355369" இலிருந்து மீள்விக்கப்பட்டது