பி. என். வல்லரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. என். வல்லரசு என்று அழைக்கப்பட்ட தங்கராஜ்,[1] (இறப்பு 21 அக்டோபர் 2000) தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.

வல்லரசு 1984 ஆம் ஆண்டு ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் பார்வார்டு பிளாக்கு கட்சி சார்பில் போட்டியிட்டார்.[1][2] அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த காரணத்தால் எம்.ஜி. இராமச்சந்திரனின் வேட்புமனுவில் கையெழுத்துக்குப் பதிலாக வைக்கப்பட்ட அவரது கைரேகை பதிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வல்லரசு வழக்கு தொடர்ந்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் மட்டுமே தனது வேட்பு மனுவில் கைரேகையை பதிவு செய்ய முடியும் [2] என்பதால் எம். ஜி. இராமச்சந்திரனின் மனுவை தள்ளுபடி செய்யவும் அவரது பதவி பிரமாணத்தையும் செல்லுபடி ஆகாததாக அறிவிக்க கோரிக்கை விடுத்தார். இருப்பினும் சென்னை உயர்நீதிமன்றம் இவரது கோரிக்கையை நிராகரித்தது.[3] அத்தேர்தலில் எம்.ஜி. இராமச்சந்திரன் வெற்றி பெற வல்லரசு இரண்டாம் இடம் பிடித்தார்.[1] 1989 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்[4] 1996 தமிழக சட்டமன்ற தேர்தலில் பார்வார்டு பிளாக்கு கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[5] 1991 சட்டமன்ற தேர்தலில் பார்வார்டு பிளாக்கு கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார் [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Statistical Report on General Election, 1984" (PDF). Election Commission of India. p. 275. பார்க்கப்பட்ட நாள் 2017-05-17.
  2. 2.0 2.1 Venkatramani, S. H. (31 December 1984). "Dual sympathy". India Today. http://indiatoday.intoday.in/story/mgr-banks-on-surge-of-sympathy-for-him-to-translate-itself-into-votes/1/361226.html. 
  3. Prakash, Abhinav (2010). Law Relating to Elections (2nd ). Universal Law Publishing. பக். 125–126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8-17534-835-6. https://books.google.com/books?id=KXHUlDzJ2g4C&pg=PA125. 
  4. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  5. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 8. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  6. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 292. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._என்._வல்லரசு&oldid=3943927" இலிருந்து மீள்விக்கப்பட்டது