பி. அய்யாக்கண்ணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. அய்யாக்கண்ணு என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனரும் அதன் தலைவருமாவார்.[1]

வாழ்க்கை[தொகு]

அய்யாக்கண்ணு தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான இவருக்கு மனைவி சந்திரலேகா[2], துணைவி ரேவதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி சந்திரலேகா, முத்த மகனான கோபிக்கண்ணு மற்றும் இளைய மகனான ஜோதிக்கண்ணு மற்றும் முத்த மருமகள் அனைவருமே வழக்கறிஞர்கள். இவருக்குச் சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது அதில் விவசாயமும் செய்துவருகிறார்.

பொதுவாழ்வு[தொகு]

இவர் 1977 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் முசிறி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்குப் போட்டியிட்டுள்ளார். அதன் பிறகு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். அக்கட்சி பல பிரிவுகளாக பிளவுபட்டதும் தேசிய விவசாயிகள் சங்கம் என்ற சங்கத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் பாரதிய கிசான் சங்கத்தில் மாநில பொதுச் செயலாளர், மாநில துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்து, விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.[3]

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், மத்திய அரசை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என பாரதிய கிசான் சங்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதிலிருந்து விலகி, 2015 இல் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். 2017 ஆண்டு விவசாயிகளைத் திரட்டி தில்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயியின் நிலையை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் கழுத்தில் மனித மண்டை ஓடுகளைத் தொங்கவிட்டும், கைகளில் மண் சட்டிகளை ஏந்தியும், அரை நிர்வாண கோலத்திலும், விவசாயியை சடலமாகக் கிடத்தியும், மொட்டை அடித்துக்கொண்டும், பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்தும், எலிக்கறி மற்றும் பாம்புக் கறி உண்ணுதல் என பல்வேறு நூதன போராட்டங்களை விவசாயிகளைக் கொண்டு நடத்தி வருகின்றார்.[4] இதற்கு ஆதரவு பெருகிவருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆர்.ஷபிமுன்னா (28 மார்ச் 2017). "டெல்லியில் தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்: குடியரசு தலைவர், மூன்று மத்திய அமைச்சர்களிடம் மனு". செய்தி. தி இந்து. 31 மார்ச் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. மு.பார்த்தசாரதி (12 மே 2017). நிர்வாணம் வேண்டாம்னு டெல்லிக்கே போய் கெஞ்சினேன்..!’’ - அய்யாக்கண்ணு மனைவி சந்திரலேகா!. விகடன். https://www.vikatan.com/news/politics/89152-i-even-went-to-delhi-to-request-him-not-to-get-naked---says-ayyakannus-wife-chandralekha. 
  3. யார் இந்த அய்யாக்கண்ணு?
  4. எஸ்.கல்யாணசுந்தரம் (30 மார்ச் 2017). "டெல்லியை அதிர வைக்கும் நூதன போராட்டங்கள்: விவசாயிகளை வழிநடத்தும் அய்யாக்கண்ணு யார்?". செய்திக்கட்டுரை. தி இந்து. 31 மார்ச் 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._அய்யாக்கண்ணு&oldid=3577787" இருந்து மீள்விக்கப்பட்டது