பிவிலி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிவிலி ஆறு (Pioli river)(மராத்தி: पिवळी नदी) என்பது இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள நாக்பூர் நகரின் வடக்குப் பகுதியில் பாயும் ஒரு ஆறு ஆகும். பையோலிஆறு நாக் ஆற்றின் இடது கரையின் கிளை ஆறாகும்.

இந்த ஆறு நாக் ஆற்றின் வழியாக கன்ஹான் - பென்ச் ஆற்றிற்கு நீரை வழங்குகிறது. இந்த ஆறு16.7 கிலோமீட்டர் நீளமுடையது. இது நாக்பூரின் மேற்கில் உள்ள லாவா-தாபா கிராமத்தில் உற்பத்தியாகிறது. பிவிலி ஆறு பவன்கான் அருகே நாக் ஆற்றினைச் சந்திக்கிறது. போர் ஓடை உட்பட நான்கு இயற்கை நீர் ஓடைகள் ஆற்றுக்கு நீரை வழங்கப் பயன்படுத்தப்பட்டன. இது வடமேற்கு நாக்பூரில் உள்ள கோரேவாதா அணை மற்றும் மத்திய நாக்பூரில் உள்ள சம்பர் நாலா ஆகியவற்றிலிருந்து நீர் பெறுகிறது.

பிவிலி ஆறு நாக்பூரின் வடிகால் பகுதியாகச் செயல்படுகிறது. இதன் விளைவாக நகரத்தின் நகர்ப்புற கழிவுகளால் இதன் சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபட்டுள்ளது. மேலும் பல இடங்களில் ஆக்கிரமிப்பால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.[1]

நாக்பூர் மாநகராட்சி தன் புத்துயிர் திட்டத்தின் ஒரு பகுதியாக பிவிலி ஆற்றின் குறுக்கே மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Proshun Chakraborty (2013-05-16). "All eyes on Pili river now | Nagpur News". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
  2. Kh, Nivedita; ekar (2020-05-19). "Is Nagpur Really a Smart City When It Comes to Water?". The Wire Science (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிவிலி_ஆறு&oldid=3592684" இலிருந்து மீள்விக்கப்பட்டது