உள்ளடக்கத்துக்குச் செல்

நாக் ஆறு

ஆள்கூறுகள்: 21°06′N 79°28′E / 21.100°N 79.467°E / 21.100; 79.467
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாக் நதி

நாக் ஆறு(Nag River)(மராத்தி : नाग नदी) என்பது இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் நகரத்தின் ஊடாக பாயும் ஆறாகும். இது நாக்பூர் என்ற பெயருக்கு சொற்பிறப்பியல் வழங்குவதாக அறியப்படுகிறது.

கன்ஹான்-பெஞ்ச் ஆற்றின் ஓர் பகுதியாக, நாக் நதி வாடிக்கு அருகிலுள்ள லாவா மலைகளில் உருவாகிறது. நாக் மற்றும் பியோலி நதிகள் பவங்கான் அருகில் சந்திக்கின்றன. நாக் மற்றும் போரா நதியின் சங்கமம் தைட்டூருக்கு அருகிலும், நாக் மற்றும் கன்ஹான் நதியின் சங்கமம் சவங்கி கிராமத்திற்கு அருகிலும் உள்ளது.[1] 2001இல் பட்டியலிலிருந்து அகற்றப்பட்ட, இந்த நதியினை, நவம்பர் 2015இல், நகரத்தின் பாரம்பரிய மீட்டெடுப்பு பட்டியலில் இந்த ஆறும் இடம்பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.[2]

இந்த ஆறு நாக்பூரின் வடிகாலா மாறியுள்ளது. இதன் விளைவாக இதன் சுற்றுச்சூழல் நகர்ப்புற கழிவுகளால் பெரிதும் மாசுபட்டுள்ளது

புத்துணர்ச்சி மற்றும் அழகுபடுத்தல்[தொகு]

நாக் ஆற்றிற்குப் புத்துணர்ச்சி வழங்கும் விதமாகத் தேசிய நதி பாதுகாப்பு இயக்குநரகம் 2019 நவம்பரில் ரூ. 2434 கோடி செலவில் திட்டம் ஒன்றினை அனுமதித்தது. இந்த செலவு முந்தைய மதிப்பீட்டில் 1476.96 கோடியாக இருந்தது. ஒப்புதல்களில் தாமதம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியைச் சேர்ப்பதே இதற்குக் காரணம்.[3] திட்டத்தின் மத்திய அரசின் பங்கு 60%, மாநிலத்தின் பங்கு 25% ஆகும். மீதமுள்ள 15% என்.எம்.சி. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மையம் மற்றும் மாநில பங்குகளுக்கு நீண்ட கால கடனை அடிப்படையில் அமைகிறது. இந்த திட்டம் நாக் ஆற்றுடன் பியோலி நதி புனரமைப்பினையும் உள்ளடக்கியது. மேலும் இது முடிவடைய நான்கு ஆண்டுகள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாக்பூர் மாநகராட்சி (என்.எம்.சி) நாக் ஆறு மேம்பாடு திட்டத்தையும் ரூ .1,600 கோடிக்குத் தயாரிக்கிறது. பிரான்சைத் தளமாகக் கொண்ட ஏ எப் டி (பிரெஞ்சு அபிவிருத்தி நிறுவனம்) விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து வருகிறது. மேலும் இந்த திட்டத்திற்கும் நீண்ட கால கடன் அடிப்படையில் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nag River Basin". Archived from the original on 2011-10-03.
  2. "Heritage status for Nag river". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-06-29.
  3. Mundhada, Tejas. "Nag River will finally be rejuvenated". The Live Nagpur (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-12.
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக்_ஆறு&oldid=3968216" இலிருந்து மீள்விக்கப்பட்டது