பிளேஸோபீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிளேஸோபீடியா விக்கிப்பீடியாவுடன் கூகிள் தேசப்படங்களை இணைக்கும் இணையமூடான முறையாகும். இது ஐக்கிய இராசியத்தின் எனது சமூகம் எனப்பொருள்படும் மைசொசாயட்டியினாரால் செப்டெம்பர் 2005 முதல் ஆரம்பித்து நிர்வாகிக்கப் படுகின்றது.

பயனர்கள் தேசப்படத்தில் இடங்களைக் குறிக்கவியலும் (போதுமான அளவுத்திட்டத்தின் கீழ்) பின்னர் அதை ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரையுடன் இணைக்கவியலும். பின்னர் யாராவது தேசப்படத்தைப் பார்வையிடும் போது விக்கிப்பீடியாவுடன் இணைக்கும் குண்டூசியானது காட்சியளிக்கும் அத்துடன் அவ்விணைப்பைத் தந்தவரின் பெயர் விபரங்களும் காண்பிக்கப்படும். திருத்தங்களும் மீள்பரிசீலனைகளை பிளேஸோபீடியாவிற்கு வேலை செய்பவர்கள் மேற்கொள்வார்கள்.

KML கோப்பூடாக கூகிள் ஏர்த் பயன்ர்களும் இதனைப் பார்வையிட முடியும். இப்பக்கமானது RSS ஊட்டுக்களை அளிக்கின்றது.

பல்வேறு பட்ட திட்டங்கள் கூகிள் ஏர்த்துடன் இணைப்பதற்க்கக ஆரம்பிக்கப் பட்டுள்ள பொழுதும் ஆள்கூறுகளைப் பயன்படுத்துவதால் பயனர்களின் உதவி தேவைப் படுகின்றது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேஸோபீடியா&oldid=3221495" இலிருந்து மீள்விக்கப்பட்டது