பிளேபோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிளேபோய் வயது வந்தோருக்கான அமெரிக்க இதழாகும். இந்த இதழ் பெண்களை கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும், ஆபாசமாகவும் காட்சிப்படுத்துகின்றது. 1953 இல் ஹூக் ஹெஃப்னர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட இது பிளே போய் தொழிலகம் என்னும் நிறுவனமாக தொலைக்காட்சி, இணையம் போன்ற எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலிருந்து மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பதிப்புக்கள் வெளிவருகின்றன. பெண்களின் நிர்வாணப் படங்களையும் விளையாட்டு, நுகர்வுப் பொருட்கள் போன்ற பலவித அம்சங்கள் பற்றிய கட்டுரைகளையும் சில வேளைகளில் புனைவு இலக்கியங்களையும் தாங்கி வெளிவருகிறது. சீனா, மியன்மார், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் இவ்விதழுக்குத் தடைவிதித்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேபோய்&oldid=1897978" இருந்து மீள்விக்கப்பட்டது