உள்ளடக்கத்துக்குச் செல்

பிளாங்க் நாய்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாங்க் நாய்சு, வாக் தி நைட் (8 மார்ச் 2007 அன்று பெங்களூருவை மீட்டெடுப்போம் நிகழ்வினைப் போன்றது

பிளாங்க் நாய்சு (Blank Noise) என்பது ஒரு சமூக/ பொதுக் கலைத் திட்டமாகும், இது இந்தியாவில் பொதுவாக பெண்களைப் பகடி செய்தல் என்று அழைக்கப்படும் தெரு துன்புறுத்தலை எதிர்கொள்ள முயல்கிறது. [1] [2] ஆகஸ்ட் 2003 இல் ஜஸ்மீன் பதேஜாவால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பெங்களூரில் உள்ள சிருஷ்டி கலை மற்றும் அறிவியல் தொழில்நுட்பப் பள்ளியின் மாணவர் திட்டமாகத் தொடங்கியது, அதன் பிறகு இந்தியாவின் பிற நகரங்களுக்கும் இந்த இயக்கம் பரவியது. [3]

செயல்பாடுகள்

[தொகு]

பிளாங்க் நாய்சு இயக்கம் தன்னார்வத் தொண்டர்களால் வழிநடத்தப்பட்டு முழுமையாக இயக்கப்படுகிறது. பரவலான வேறுபாடு கொண்ட புவியியல் இடங்கள் மற்றும் வயதுக் குழுக்களில் இருந்து ஆண் மற்றும் பெண் தன்னார்வலர்களின் ஒரு முக்கிய குழு இதில் கூட்டாக இணைந்து வேலை செய்கிறது. பிளாங்க் நாய்சு தெரு பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில் பொது உரையாடலைத் தூண்ட முயல்கிறது. உரையாடல்கள் கூட்டாக "பெண்களைப் பகடி செய்தல்" என்ற வரையறையை உருவாக்குவதிலிருந்து "கிண்டல்", "துன்புறுத்தல்", "ஊர்சுற்றுவது" ஆகியவற்றின் எல்லைகளை வரையறுக்கின்றன. இந்த குழு தெரு பாலியல் வன்முறை, துன்புறுத்தல் மற்றும் "பெண்களைப் பகடி செய்தல்" ஆகியவற்றின் எல்லைகளை உருவாக்குகிறது மற்றும் அவற்றை மீண்டும் பொதுவெளியில் கொண்டுவந்து , பொது விவாதத்தை உருவாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. [3]

இது நேரடி நகர நடவடிக்கை மற்றும் பொது தலையீடுகள் மூலம் தங்கள் நகரங்களுடனான பெண்களின் பயம் அடிப்படையிலான உறவை நிவர்த்தி செய்கிறது. [3] அவர்கள் பிளாங்க் நாய்சு தோழர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். பிளாங்க் நாய்சு 'பெண்களைப் பகடி செய்தலை' நோக்கி ஒரு அணுகுமுறை மாற்றத்தை நோக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது மற்றும் பொதுமக்கள் தன்னார்வமாக இந்த பிரச்சினையில் கூட்டுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று இந்த அமைப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிரச்சாரத்தின் சுவரொட்டி "நான் அதை ஒருபோதும் கேட்கவில்லை".

பிளாங்க் நாய்சு இயக்கம் இந்தியா, பெங்களூரில் நிறுவப்பட்டாலும், அது மும்பை, டெல்லி, சென்னை, கல்கத்தா, சண்டிகர், ஹைதராபாத் மற்றும் லக்னோ போன்ற பிற நகரங்களுக்கும் அதன் செயல்பாடுகள் பரவியது. இது அவமானம் மற்றும் பழி என்ற கருத்தை "நான் ஒருபோதும் இதனை கேட்கமாட்டேன்" (தெருக்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக கேளுங்கள்) போன்ற பிரச்சாரங்கள் மூலம் பரப்புரையில் ஈடுபடுகிறது. [4] இதில் பரவலாக இந்த இயக்கத்தினர் களைய முற்படும் கருத்து பெண்கள் அணியும் ஆடையானது ஆண்களைக் கவரக் கூடிய வகையிலோ அல்லது மிகவும் கவர்ச்சியாக அல்லது அரை குறை ஆடையுடன் இருப்பதனால் தான் இது போன்ற வன்முறைகள் ஏற்படுகிறது அதனால் அவர்கள் சரியான ஆடையினை அணிய வேண்டும் எனும் கருத்தைத் தான் களைய முற்படுகின்றனர்.தெரு நடவடிக்கைகள் மற்றும் உரையாடலின் மூலம், பிளாங்க் நாய்சு தெருக்களில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான சூழலை அடைய இயலும் எனும் அதன் நோக்கங்களை அடைய செயல்படுகிறது, மேலும் சமுதாயம் பொதுவாக பெண்களை ஆண்களுக்கு சமமாக நடத்தவும் உதவுகிறது.

டிசம்பர் 2012 இல், டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு இளம் பெண் கொடூரமாக பாலியல் வன்கலவி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிளாங்க் நாய்சு பாதுகாப்பான நகர உறுதிமொழியைத் தொடங்கியது, இது நகரங்களை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக்குவதற்கான வழிகளை உறுதியளிக்க குடிமக்களை வலியுறுத்துகிறது. [5]

இந்தத் திட்டம் தெளிப்பு ஓவியம் செய்தல், பொது இடங்களில் பாலியல் வல்லுறவிற்கு ஆளானவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்தல் மற்றும் துன்புறுத்தலுக்கு எதிரான செய்திகளைக் கொண்ட கொசுவச் சட்டைகளை அச்சிடுதல் போன்ற செயல்களை மேற்கொண்டுள்ளது. இது ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது. [6]

சான்றுகள்

[தொகு]
  1. One night stand on the streetsதி இந்து, Metro Plus Bangalore. 12 July 2005.
  2. Women take to streets to stake claim to their rights தி இந்து, New Delhi. 17 September 2006.
  3. 3.0 3.1 3.2 "Case Study: Blank Noise". Archived from the original on 24 May 2013. பார்க்கப்பட்ட நாள் 17 March 2013.
  4. "The Blank Noise Project, India". பார்க்கப்பட்ட நாள் 17 March 2013.
  5. "Pledge : Making Cities Safe". Blank Noise. பார்க்கப்பட்ட நாள் 17 March 2013.
  6. A night out on Capital pavements to end eveteasing பரணிடப்பட்டது 14 மே 2007 at the வந்தவழி இயந்திரம்Indian Express Delhi Newsline. 17 September 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாங்க்_நாய்சு&oldid=3315342" இலிருந்து மீள்விக்கப்பட்டது