பிலிப் ஜான்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இப்பொழுது சோனி கட்டிடம் எனப்படும், AT&T கட்டிடம், பிலிப் ஜான்சனால் வடிவமைக்கப்பட்டது.

பிலிப் கோர்ட்டலியோ ஜான்சன் (Philip Cortelyou Johnson) என்னும் முழுப் பெயர் கொண்ட பிலிப் ஜான்சன் (ஜூலை 8, 1906ஜனவரி 25, 2005) அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க கட்டிடக்கலைஞர்களில் ஒருவராவார். தடித்த சட்டம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்த இவர், பல பத்தாண்டுகளாக அமெரிக்கக் கட்டிடக்கலைத் துறையில் மிகக் கூடுதலாக அறியப்பட்ட ஒருவராக விளங்கினார்.

1930 ஆம் ஆண்டில், நவீன கலை அருங்காட்சியகத்தில், கட்டிடக்கலைக்கும், வடிவமைப்புக்குமான பிரிவைத் தொடங்கினார். பின்னர் 1978 இல் இதன் நம்பிக்கைப் பொறுப்பாளராக (trustee), இவருக்கு அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் சங்கத்தின் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 1979 இல் இவருக்கு முதலாவது கட்டிடக்கலைக்கான பிரிட்ஸ்கர் பரிசும் வழங்கப்பட்டது.

இளமைக் காலம்[தொகு]

ஜான்சன் ஓஹியோவிலுள்ள கிளீவ்லாந்தில் பிறந்தார். இவர் நியூ யார்க், டர்ரிடவுனில் உள்ள ஹாக்லி பாடசாலையில் கல்வி கற்றார். பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில், வரலாறும், தத்துவமும் பயின்றார். ஜான்சன் பல முறை ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட நீண்ட பயணங்களினால் அடிக்கடி அவரது படிப்பு தடைப்பட்டது. எனினும் இப்பயணங்கள் இவரது கல்வியில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தன. இவர் பார்த்தினன் போன்ற பல வரலாற்றுச் சின்னங்களுக்குச் சென்று பார்த்ததன் மூலம், கட்டிடக்கலை மீது அவரது ஆர்வம் வளர்ந்தது.

1928 ஆம் ஆண்டில் இவர், அக்காலத்தில், பார்சிலோனா கண்காட்சிக்கான ஜெர்மனியில் காட்சி மண்டபத்துக்கு வடிவமைப்புச் செய்து கொண்டிருந்த பௌஹவுசைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான லுட்விக் மீஸ் வான் டெர் ரோவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு ஜான்சனுக்கு மிக முக்கியமாக அமைந்ததுடன், இவ்விருவருக்கிடையான, ஒத்துழைப்பு, போட்டி என்பவை கொண்ட ஒரு வாழ்நாள் முழுதும் தொடர்ந்த ஒரு தொடர்பின் அடிப்படையாகவும் அமைந்தது. மாணவன், தனது ஆசானை அடையாளம் கண்டுகொள்ள உதவிய சந்திப்பு அது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்_ஜான்சன்&oldid=1888961" இருந்து மீள்விக்கப்பட்டது