லுட்விக் மீஸ் வான் டெர் ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லுட்விக் மீஸ் வான் டெர் ரோ
Hugo Erfurth - Portrait Ludwig Mies van der Rohe, 1934.jpg
பிறப்பு27 மார்ச் 1886
ஆஃகன்
இறப்பு17 ஆகத்து 1969 (அகவை 83)
சிகாகோ
பணிகட்டடக் கலைஞர், வரைகலைஞர், ஆசிரியர்
குறிப்பிடத்தக்க பணிகள்Barcelona Pavilion, Farnsworth House
விருதுகள்Pour le Mérite for Sciences and Arts, Ernst Reuter Medal, Commander's Cross of the Order of Merit of the Federal Republic of Germany

லுட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies van der Rohe) (இயற்பெயர்: மரியா லுட்விக் மைக்கேல் மீஸ்(மார்ச் 27, 1886ஆகஸ்ட் 17, 1969) ஒரு கட்டிடக் கலைஞராவார். இவர் ஜெர்மனியில் பிறந்தவர்.

இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர்களுள் ஒருவராக விளங்கினார். நவீன கட்டிடக்கலையின் முன்னோடிகளுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். கண்ணாடி, உருக்கு ஆகிய கட்டிடப் பொருட்களைப் பயன்படுத்தி எளிமையான வடிவங்களைக்கொண்ட கட்டிடங்களை இவர் வடிவமைத்தார். "குறைவே நிறைவு" (Less is More) என்ற இவரது கூற்று கட்டிடக்கலை உலகில் மிகவும் பிரபலமானது.

ஜெர்மனியில் இவர்[தொகு]

ஜெர்மனியிலுள்ள ஆச்சென் என்னும் ஊரில் பிறந்தார். ஆரம்பத்தில் இவரது குடும்பத் தொழிலான கல் செதுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பின்னர் பெர்லின் நகருக்குச் சென்று அங்கே புரூணோ போல் என்பவருடைய அலுவலகத்தில் பணிபுரிந்தார். 1908 ல் பீட்டர் பெஹ்ரென்ஸ் (Peter Behrens) என்பவருடன் பணிபுரியத் தொடங்கிய மீஸ் 1912 வரை அங்கேயே இருந்தார். ஒரு கல் செதுக்குபவரின் மகனாயிருந்து பெர்லின் நகரத்தின் உயர் குடியில் ஒருவராக உயர்ந்த இவர் இதனை வெளிப்படுத்தும் வகையில் தனது பெயரையும் மாற்றிக் கொண்டார். 1910 களிலும், 1920 களிலும் பெஹ்ரென்ஸ் அவர்களுடைய செல்வாக்கின் கீழ் அவருடைய தனித்துவமான வடிவமைப்பு அணுகுமுறையை வளர்த்து, அதையே தன் நீண்ட வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்தார். இவருடைய இந்த அணுகுமுறை உயர்நிலை அமைப்புத் தொழில்நுட்பத்தையும், பிரஷ்யச் செந்நெறிப் போக்கையும் (Prussian Classicism) அடிப்படையாகக் கொண்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]