பிலால்
பிலால் (ரலி) Bilal ibn Rabah al-Habashi بلال بن رباح | |
|---|---|
பாரசீகத்தைச் சேர்ந்த இசுலாமிய சிற்பம் (10ம் நூற்றாண்டு), "பிலால் தொழுகைக்காக அழைத்தல்" | |
| பிறப்பு | 580 மக்கா, அரேபியா |
| இறப்பு | மார்ச்சு 2, 640 (அகவை 59) டமாஸ்கஸ் அல்லது மதீனா |
| சமயம் | இசுலாம் |
பிலால் இப்னு ராபா அல் ஹபாஷி (Bilal ibn Rabah al-Habashi) அடிமையாக இருந்து இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டவர்களில் முதலாமவர். இவர் 578-582 காலப்பகுதியில் மெக்காவில் பிறந்த எத்தியோப்பியர் ஆவார்.
அபூபக்கரினால் விடுவிக்கப்பட்ட அடிமைகளில் இவரும் ஒருவர். சிறந்த குரல் வளம் படைத்தவர். இதனால் முகம்மது நபி அவர்கள் ஆப்பிரிக்க அடிமையாக இருந்த பிலாலைத் தனது தொழுகைக்கு அழைப்புவிடும் 'அதான்' சொல்பவராகத் தேர்ந்தெடுத்தார். இவர் "பிலால் இப்னு ரியா", "இப்னு ராபா", "பிலால்-அல்-ஹபாஷி" அல்லது "எத்தியோப்பியாவின் பிலால்" எனவும் அழைக்கப்பட்டார்.
பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை.. பிலால் இப்னு ரபா கி பி 580 இல் அதாவது நபி (ஸல்)அவர்கள் பிறந்து 10 வருடம் கழித்து மக்காவில் ஹெஜாஸில் பிறந்தார். அவரின் தந்தை ரபா, பனு ஜுமாவின் குலத்தின் அரபு அடிமையாக இருந்தார், அதே சமயம் அவரது தாயார் ஹமாமா அபிசீனியாவின் முன்னாள் இளவரசி என்றும் அதாவது யானை ஆண்டு நிகழ்வின்போது மக்காவாசிகளால் பிடிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது. அடிமைத்தனத்தில் அதாவது அடிமை பெற்றோர்களுக்கு பிறந்ததால், பிலால் தனது எஜமானரான உமையா இப்னு கலஃபுக்கு வேலை செய்வதைத் தவிர வேறு வழியிறுக்கவில்லை. கடின உழைப்பின் மூலம், பிலால் ஒரு நல்ல அடிமையாக அங்கீகரிக்கப்பட்டார் மற்றும் மக்காவில் உள்ள சிலைகளின் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும், அரேபியாவின் மக்காவில் இனவெறி, குலவெறி மற்றும் சமூக அரசியல் சட்டங்கள் பிலாலை சமூகத்தில் ஒரு பெரிய நிலையை அடைவதைத் தடுத்தன.