உள்ளடக்கத்துக்குச் செல்

பிறிதுமொழிதல் அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிறிது மொழிதல் அணியைத் தண்டியலங்காரம் என்னும் நூல் ஒட்டணி என்று குறிப்பிடுகிறது. அது குறிப்பிடும் 35 அணிகளில் இது ஒன்று. புலவர் தான் சொல்ல விரும்பும் கருத்து தன் பாடலில் ஒட்டிக்கொண்டிருக்கும்படி பிறிதொன்றைக் கூறுவது ஒட்டணி. இதனை நுவலா நுவற்சி, தொகைமொழி என்றும் குறிப்பிடுவர்.

அகப் பாடல்களில் இப்படிப் பொருள் ஒட்டவைக்கப்படுமாயின் அது உள்ளுறை உவமம் எனப்படும். இது தொல்காப்பியம் கூறும் தமிழ்நெறி.

1

பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் [1]

என வரும் திருக்குறளில்
எண்ணிக்கை மிகுதியாலும் வலிமை பெருகும் என்னும் கருத்து
மிகவும் நொய்தான (லேசான) மயில்பீலி ஆனாலும் அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் பாரம் மிகுதியாகி வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்று கூறும் செய்தியால் விளங்கவைக்கப்பட்டுள்ளது.
இது பிறிது மொழிதல் அணி.
2

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து [2]

இடம் அறிந்து செயல்படவேண்டும்.
பிறிது மொழிதல் அணி

தண்டியலங்காரம்

[தொகு]

தமிழ்நூல் தண்டியலங்காரம் வடநூல் தண்டியலங்காரத்தைப் பின்பற்றியது. இது இந்த அணியை விளக்குவது புதுவரவு.[3] இந்த அணியில் நான்கு வகை உண்டு. [4] இவற்றிற்குப் பழைவுரை தரும் மேற்கோள் பாடல்கள், உரையாசிரியரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவாகவும், அகத்துறைப் பாடல்களாகவும் உள்ளன. [5]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. திருக்குறள் 475
  2. திருக்குறள் 495
  3. கருதிய பொருள்தொகுத்(து) அதுபுலப் படுத்தற்(கு)
    ஒத்ததொன் றுரைப்பின்அஃ(து) ஒட்டென மொழிப. தண்டியலங்காரம் 52
    தன்னால் கருதப்பட்ட பொருளை மறைத்து , அதனை வெளிப்படுத்தற்குத் தக்க பிறிதொன்றனைச் சொல்லின் , அஃது ஒட்டு என்னும் அலங்காரமாம். இவ்வணியைப் பிறிது மொழிதல் , நுவலா நுவற்சி , சுருங்கச் சொல்லல் , தொகைமொழி என்ற பெயர்களாலும் வழங்குவர். சிலர் உள்ளுறையுவமம் , உவமப் போலி என்றும் வழங்குவர். – பழைய உரை
  4. அடையும் பொருளும் அயல்பட மொழிதலும்
    அடைபொது வாக்கி யாங்ஙன மொழிதலும்
    விரவத் தொடுத்தலும் விபரீதப் படுத்தலும்
    எனநால் வகையினும் இயலும் என்ப. தண்டியலங்காரம் 53
  5. மேற்கோள் பாடல்கள்
    1
    வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
    குறைபடுதேன் வேட்டுங் குறுகும் - நிறைமதுச்சேர்ந்(து)
    உண்டாடுந் தன்முகத்தே செவ்வி யுடையதோர்
    வண்டா மரைபிரிந்த வண்டு '
    2
    உண்ணிலவு நீர்மைத்தா யோவாப் பயன்சுரந்து
    தண்ணளி தாங்கு மலர்முகத்துக் - கண்ணெகிழ்ந்து
    நீங்க லரிய நிழலுடைத்தாய் நின்றெமக்கே
    ஓங்கியதோர் சோலை யுளது '
    3
    தண்ணளிசேர்ந் தின்சொல் மருவுந் தகைமைத்தாய்
    எண்ணிய எப்பொருளும் எந்நாளும் - மண்ணுலகில்
    வந்து நமக்களித்து வாழும் முகிலொன்று
    தந்ததால் முன்னைத் தவம் '
    4
    'கடைகொல் உலகியற்கை! காலத்தின் தீங்கால்
    அடைய வறிதாயிற் றன்றே - அடைவோர்க்(கு)
    அருமை யுடைத்தன்றி யந்தேன் சுவைத்தாய்க்
    கருமை விரவாக் கடல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறிதுமொழிதல்_அணி&oldid=1255961" இலிருந்து மீள்விக்கப்பட்டது