பிறப்பொலியியல்
Jump to navigation
Jump to search
பிறப்பொலியியல் (articulatory phonetics) என்பது, ஒலிப்பியலின் (phonetics) துணைத்துறை ஆகும். ஒலிப்புப் பற்றி ஆய்வு செய்யும்போது, ஒலிப்பியலாளர்கள், எவ்வாறு மனிதர்கள் உயிரொலிகள், மெய்யொலிகள் முதலிய ஒலிகளை உருவாக்குகிறார்கள் என்பதை அறிய முயல்கிறார்கள். அதாவது, பிறப்பொலியியல், குரல்வளை, நாக்கு, உதடு, தாடை, அண்ணம், பல் முதலிய ஒலிப்புறுப்புக்கள் வெவ்வேறு வகையில் இயங்கி எவ்வாறு காற்றைக் கட்டுப்படுத்தி குறிப்பிட்ட ஒலிகளை உருவாக்குகின்றன என ஆராய்வதில் கவனம் செலுத்துகின்றது.