பிரேம் சிங் ரத்தோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2022 ஆம் ஆண்டில் பிரேம் சிங் ரத்தோர்

பிரேம் சிங் ரத்தோர் (Prem Singh Rathore) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தைச் சேர்ந்த இவர் தெலுங்கானா சட்டப் பேரவையில் கோசாமகால் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் பாரதிய சனதா கட்சி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.

பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் போது பாரதிய சனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் இருந்தார், பின்னர் ஐதராபாத்து நகரத் தலைவராகவும், சுற்றியுள்ள மாவட்டங்களின் பொறுப்பாளராகவும் இருந்தார்.

சிறிது காலம் தெலுங்கானா இராசுட்ரிய சமிதி கட்சியில் இருந்தார். கே.சந்திரசேகர் ராவ் அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சர் பதவிக்கு இணையான முசி ஆற்றங்கரை மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றினார். [1]

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில், தெலுங்கானா இராசுட்ரிய சமிதி வேட்பாளராக, பாரதிய சனதா கட்சியின் வேட்பாளர் டி. ராசா சிங்கிடம் ரத்தோர் தோல்வியடைந்தார்.

தெலுங்கானா மாநில தேர்தலுக்கு முன்பு 2023 ஆம் ஆண்டில் மீண்டும் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார். பாரதிய சனதா கட்சியில் இவர் நுழைந்தது டி.ராசா சிங்குக்கு கோசாமகால் வாக்குகளைப் பெற உதவியது, அவரது மூன்றாவது பதவிக்கும் கணிசமாக உதவியது.

அரசியல் வாழ்க்கை[தொகு]

பாரதிய சனதா கட்சிக்கு மாறுவதற்கு முன்பு, இரத்தோர் தெலுங்கு தேசம் கட்சியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1999 ஆம் ஆண்டு தேர்தலின் போது, ஐதராபாத்தில் உள்ள மஹராச்கஞ்சு தொகுதியில் இருந்து, பின்னர் கோசாமகால் சட்டமன்றத் தொகுதி என அழைக்கப்பட்ட தொகுதியிலிருந்து, பாரதிய சனதா கட்சிக்கு பைரோன் சிங் செகாவத்தால் பரிந்துரைக்கப்பட்டார். 1999 தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றார், இவரது பதவிக்காலம் தொகுதிக்குள் மேலும் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. [2] 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை, இவர் பாரதிய சனதா கட்சியின் பிரதிநிதியாக நகரத் தலைவராக இருந்தார் [3] மேலும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் இக்கட்சியை வெற்றிபெறச் செய்த பெருமைக்குரியவராகவும் இருந்தார். கட்சியிலிருந்து பதவி விலகிய பின்னர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் அக்கட்சி ஒரு இடத்தை மட்டுமே வென்றது.

2016 ஆம் ஆண்டில், ரத்தோர் தெலுங்கானா இராசுட்ரிய சமிதிக்கு மாறினார், அக்கட்சி இப்போது பாரத் இராசுடிர சமிதி என்று அழைக்கப்படுகிறது.

கட்சி புதியவர்களுக்கு வய்ப்புகளை விற்கிறது என்றும் மூத்த வீரர்களுக்கு மதிப்பளிக்கவில்லை [4] என்றும் காரணம் கூறி இவர் பாரதிய சனதா கட்சியிலிருந்து விலகினார்.

பிரேம் சிங் ரத்தோர் 2018 ஆண்டில் தெலுங்கானா முதல்வர் கேசிஆருடன்

முசி ஆற்றங்கரை மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக இரத்தோரை முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் [5] இந்த பதவி, அமைச்சரவை அமைச்சருக்கு இணையான பதவியாகும். முசி நதிக்கரையின் மேம்பாடு மற்றும் அழகுபடுத்தலை மேற்பார்வையிடும் பொறுப்பையும் இப்பதவி இரத்தோருக்கு வழங்கியது. [6]

2018 ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் இவரது வேட்புமனுவானது கோசாமகாலில் பாரத் இராசுட்ரிய சமிதிக்கு குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கொடுத்தது, ஓரளவு முன்னிலையில் இருந்து தொகுதியில் குறிப்பிடத்தக்க சக்தியாக மாற்றப்பட்டது. [2]

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத் தேர்தலுக்கு முன்பு இவர் மீண்டும் பாரதிய சனதா கட்சியில் இணைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Desk, News (2023-11-11). "Hyderabad: Goshamahal BRS leader rejoins BJP after denial of ticket" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-18. {{cite web}}: |first= has generic name (help)
  2. 2.0 2.1 "Prem Singh Rathore likely BRS hope for Goshamahal". https://www.deccanchronicle.com/nation/politics/011023/prem-singh-rathore-brs-hope-goshamahal.html. 
  3. "prem singh rathore bjp - Google Search". பார்க்கப்பட்ட நாள் 2023-10-28.
  4. "What forced Prem Singh Rathore to resign ?" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-28.
  5. Nizamuddin, Md (July 18, 2018). "TRS finds Prem Singh a strong contender for Goshamahal seat". The Hans India. https://www.thehansindia.com/posts/index/Hyderabad-Tab/2018-07-18/TRS-finds-Prem-Singh-a-strong-contender-for-Goshamahal-seat/399007. 
  6. "TS Govt to remove encroachments from Musi River". The Hans India. June 22, 2018. https://www.thehansindia.com/posts/index/Telangana/2018-06-21/TS-Govt-to-remove-encroachments-from-Musi-River/391172. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்_சிங்_ரத்தோர்&oldid=3845523" இலிருந்து மீள்விக்கப்பட்டது