பிரேம் சரண் சத்சங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேம் சரண் சத்சங்கி
Prem Saran Satsangi
பிறப்பு 9 மார்ச்சு 1937 (1937-03-09) (அகவை 87)
வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா
Alma mater
துறை ஆலோசகர்ஜேக் பி. எல்லிசு
அறியப்பட்டது
  • அமைப்புப் படிமாக்கம்
  • பயன்முறை அமைப்பு ஆராய்ச்சி
  • கீழை மெய்யியல் ஆன் மீக மரபுகள்
  • இராதாசோமி நெறி

பிரேம் சரண் சத்சங்கி ராதா சோமி பிரிவின் எட்டாவது மற்றும் தற்போதைய சந்த் சத்குரு ஆவார்.[1][2] 2012 முதல் தன்னுணர்தல் மாநாட்டில் ஒருங்கிணைந்த கிழக்கு - மேற்கு மன்றத்தின் கிழக்கில் இருந்து தகைமை இருக்கையை அவர் வகிக்கிறார்.[3] தயல்பாக் கல்வி நிறுவனத்தின் கல்வி அறிவுரைஞர் குழுவின் தலைவராக உள்ளார்.[4]

பிறப்பும் கல்வியும்[தொகு]

அவர் பனாரசு இந்து பல்கலைக்கழக வளாகத்தில் , இந்திய ஃஓலி பண்டிகை நாளில் மார்ச் 9,1937 அன்று வாரணவாசி இந்து பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரியின் தாவரவியல் பேராசிரியரான கிருஷ்ண குமாருக்கு பிறந்தார்.

தற்போது இந்திய தொழில்நுட்பக் கழகமான வாரணாசியில் உள்ள வாரணவாசி இந்து பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பயின்று 1957 இல் பட்டம் பெற்றார்.

1960 ஆம் ஆண்டில் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் உதவித்தொகையை ஏற்றுக்கொண்டார் , அங்கு அவர் 1961 இல் மின் பொறியியலில் மூதறிவியல் பட்டம் பெற்றார். யு. எஸ். ஏ. ஐ. டி தனது முனைவர் பட்டத்திற்கான உதவித்தொகையை நீட்டித்தது , ஆனால் சத்சங்கி இந்த வாய்ப்பை மறுத்து ஜூலை 1961 இல் இந்தியா திரும்பினார். எம். பி. எம் பொறியியல் கல்லூரியில் மின் பொறியியலில் உயர்விரிவுரையாளராக நியமனம் பெற்று 1964 இல் ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.

அதன்பிறகு 1964 இல் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்தார்.[5] தொடக்க ஆண்டுகளில் அவர் அடிப்படை மின்வலைக் கோட்பாடு (பகுப்பாய்வும் தொகுப்பும்) ,கட்டுப்பாட்டுக் கோட்பாடு, மின்சார இழுவையியல் படிப்புகளை கற்பித்தார். 8 ஆண்டுகள் உதவி பேராசிரியராகவும் 1972 இல் இணை பேராசிரியராகவும் , 1973 இல் மின் பொறியியல் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

கனேடிய காமன்வெல்த் ஆராய்ச்சி நல்கை விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூக - பொருளாதார அமைப்புகளின் ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி மேற்பார்வையாளர் ஜாக் பி. எல்லிசுடன் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பில் சேர்ந்தார்.[6]

1970 கோடையில் அவர் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் பட்டமாக மூன்று மாதங்களுக்கு அமைப்பு வடிவமைப்புப் பொறியியல், மனித - சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையுடன் கூட்டு ஆராய்ச்சி பணிக்காக சென்றார். இந்தக் காலகட்டத்தில் அவர் தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை தொடர்புடைய ஆவணங்களின் வடிவில் முடித்தார். மசாசூசட்சு தொழில்நுட்ப நிறுவனத்தில் போக்குவரத்து அமைப்புகள் குறித்த ஒரு குறுகிய கோடைப் படிப்பிலும் கலந்து கொண்டார்.[7]

தயால்பாக் (1993 - தற்போது வரை)[தொகு]

1993 மே மாதம் தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தை விட்டு வெளியேறி தயால்பாக் கல்வி நிறுவனத்தில் இயக்குநராக சேர்ந்தார். 1990 களில் மென் கணினி நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் பெரிய மற்றும் சிக்கலான அமைப்புகளுக்கு அறிவார்ந்த அமைப்புகள், பொறியியல் பயன்பாடுகளின் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். மேலும் பல ஆவணங்களை வெளியிட்டார். பல முனைவர் ஆய்வறிக்கைகளை உருவாக்கினார்.

கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் தயால்பாக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பதவியை வகித்தார். ஒப்பியல் ஆராய்ச்சியும் பயன்பாடுகளும் பற்றிய ஆய்வில் தொடர்ந்து பங்கேற்ற போதிலும் அவரது முதன்மை கடமைகள் கல்வி மேலாண்மையை உள்ளடக்கியதாகும்.[8]

அவர் முறையான கல்வி, பொருள், ஆற்றல், தகவல், மனம், அறிதிறன், உணர்ச்சி, ஆன்மீக நனவின் அறிவியல் தொடர்பான அனுபவங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் , இது பண்டைய இந்தியாவில் இருந்ததை மீறியதும் நரம்பியல் இயற்பியல், அறிவாற்றல் உளவியலில் அண்மைய முன்னேற்றங்கள் சார்ந்ததும் ஆகும்.[9][10]

ஆன்மீகம்[தொகு]

இவர் 1958 இல் இராதாசோமி நெறியை உருவாக்கினார். 1993 இல் இவர் இராதாசோமி சத்சங்கத்தில் உறுப்பினரானார். சத்சங்கி 2003 மே மாதத்தில் இராதசோமி நெறியின் எட்டாம் மாண்புறு தலைவராக ஒருமனதாக தேர்வானார். இவரது வழிகாட்டுதலில், இராதாசோமி சத்சங்க அவை முராரி அறிவிப்பைத் தொடங்கியது [11] 2010, ஜூன்13 இல் பல்வேறு இராதாசோமி குழுக்களின் ஒற்றுமை ஒருங்குதிரட்டப்பட்டது.

இவர் ஆன்மீகக் கோட்பாடுகள் புற அண்டம் சார்ந்த அனைத்துக்குமான கோட்பாட்டோடு முழுமையாகப் பொருந்துவனவே என நம்புகிறார்.[12]

குடும்பம்.[தொகு]

சத்சங்கி 11 நவம்பர் 1958 அன்று (தீபாவளிக்கு பி. பி. என். சத்யவதிக்கு திருமணம் செய்து கொண்டார் , அவர்களுக்கு பிரேம் பியாரி மற்றும் தயாள் பியாரி என்ற 2 மகள்கள் உள்ளனர் , அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆராய்ச்சி[தொகு]

சத்சங்கி 90 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவர் பல தேசிய, பன்னாட்டு மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். போக்குவரத்து, ஆற்றல் அமைப்புகள், சமூக - பொருளாதார அமைப்புகள் உட்பட பயன்பாட்டு அமைப்புகள் பொறியியல் துறையில் அவரது முதன்மைப் பங்களிப்புகள் உள்ளன.[13]

மேலும் காண்க[தொகு]

  • வாட்டர்லூ பல்கலைக்கழக மக்கள் பட்டியல்

குறிப்புகள்[தொகு]

  1. Official website of Radhasoami Satsang Sabha, Dayalbagh http://www.dayalbagh.org.in/radhasoami-faith/sant-satguru.htm
  2. Radhasoami Reality: The Logic of a Modern Faith. 
  3. http://www.consciousness.arizona.edu/documents/TSC2013AgraBookofAbstracts.pdf (22-23)
  4. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 6 July 2017. பார்க்கப்பட்ட நாள் 24 April 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. Past HOD's of IIT, Delhi http://dms.iitd.ac.in/past_hods.html
  6. http://eacharya.inflibnet.ac.in/data-server/eacharya-documents/548158e2e41301125fd790cf_INFIEP_72/110/ET/72-110-ET-V1-S1__l_.pdf [bare URL PDF]
  7. Satsangi, Prem Saran (2006). "Systems movement:Autobiographical Retrospectives". International Journal of General Systems 35 (2): 127–167. doi:10.1080/03081070500422869. 
  8. "Home".
  9. "Special Talks".
  10. A Search in Secret India https://archive.org/details/ASearchInSecretIndia பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1614272891
  11. Murar Declaration as cited on the official webpage of Radhasoami Satsang Sabha, Dayalbagh http://www.dayalbagh.org.in/radhasoami-faith/murar-declaration-2010.htm
  12. "Special Talks".
  13. https://www.rscircle.com/pdf/Gracious_Huzur_Professor_Prem_Saran_Satsangi.pdf [bare URL PDF]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்_சரண்_சத்சங்கி&oldid=3779802" இலிருந்து மீள்விக்கப்பட்டது