பிரெஞ்சு முத்தம்
பிரெஞ்சு முத்தம் (French Kiss) என்பது இணையின் உதட்டோடு உதடு பதித்து, நாக்கோடு நாக்கை தொட்டுக்கொடுத்து, வெகுநேரம் நீடிக்கும் முத்தமாகும்.[1] இது நாக்கு மற்றும் வாய்ப்பகுதியின் கிளர்ச்சியைத் தூண்டுகிறது. இரண்டு நாக்குகள் தொடும் போது ஏற்படும் உணர்வு - நாக்கு போடுதல் என்றும் அழைக்கப்படுகிறது - இது என்டார்பின் வெளியீட்டைத் தூண்டுவதுடன், கடுமையான மன அழுத்தத்தை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.[2]
இப்பெயர் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் பெரும் பிரித்தானியாவில் தோன்றியதாகும். ஏனெனில் பிரெஞ்சுக்காரர்கள் மிகவும் சாகச மற்றும் உணர்ச்சிமிக்க பாலியல் நடைமுறைகளுக்குப் பெயர் பெற்றிருந்தனர்.[3]
வாய்ப்பகுதியில் வெட்டுக்காயங்கள் ஏதும் இருந்தால் பிரெஞ்சு முத்தத்தின் மூலம் நோய்த்தொற்று அபாயம் ஏற்படும்.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ மா.அருந்ததி. "லைட் கிஸ், பட்டாம்பூச்சி முத்தம், எஸ்கிமோ கிஸ்... முத்தங்களும் அர்த்தங்களும்! #KissDay" (in ta). https://www.vikatan.com/lifestyle/relationship/types-of-kisses-and-its-meanings.
- ↑ "5 Key Benefits of Kissing - Samitivej Hospital - Bangkok Thailand". https://www.samitivejhospitals.com/article/detail/benefits-of-kissing.
- ↑ Muaddi, Leah Asmelash,Nadeem (2019-07-06). "Here's why we call the open-mouth smooch a 'French kiss'" (in en). https://www.cnn.com/2019/07/06/us/french-kiss-origin-trnd/index.html.
- ↑ Dental, C. N. E. (2020-05-07). "Can Kissing Be Good for Oral Health? | CNE Dental Blog" (in en-US). https://www.cnedental.com/can-kissing-be-good-for-oral-health/.