பிரெஞ்சு கயானாவில் இந்தியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரெஞ்சு கயானாவில் இந்தியர்கள் (Indians in French Guiana) பெரும்பாலும் தமிழ், தெலுங்கு மற்றும் பிற தென்னிந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினராக உள்ளனர், இவர்களின் மூதாதையர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலத்தில் பிரெஞ்சு கயானாவிற்கு வந்த இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருந்தனர்.

இடம்பெயர்வு வரலாறு[தொகு]

1838 ஆம் ஆண்டு மற்றும் 1917 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 19,276 இந்தியர்கள் பிரெஞ்சு கயானாவில் குடியேறினர். [1] இந்தியாவில் இருந்து தொழிலாளர் 1862 ஆம் ஆண்டிலிருந்து பிரெஞ்சு கயானாவில் நுழையத் தொடங்கினர். இருப்பினும் 1880 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் பணியில் இருந்த இந்தியத் தொழிலாளர்களை மோசமாக நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், பிரித்தானிய அரசு இந்தியர்களின் ஏற்றுமதியை நிறுத்தியது. [2]

குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

  • உலோட்டசு விங்கடசாமி-ஏங்கல்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]