உள்ளடக்கத்துக்குச் செல்

பிருத்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிருத்வி
பசு வடிவத்தில் உள்ள பிருத்வியை துரத்தும் பிருத்து
அதிபதிபூமி தேவதை
பூமித்தாய்
வேறு பெயர்கள்பூமாதேவி
தேவநாகரிपृथ्वी
சமசுகிருதம்பிருத்வி கவ்டா
வகைலட்சுமி (இந்துக் கடவுள்), தேவி, பூமாதேவி, பஞ்ச பூதம்
இடம்திருப்பரமபதம், தியுலோகா
கிரகம்புவி
மந்திரம்ஓம் பூம்ஹாய நமஹ
துணைவிஷ்ணு, தியாயுஸ் பிதா
குழந்தைகள்அங்காரகன் மற்றும் நரகாசுரன்

பிருத்வி அல்லது பிருத்வி மாதா ( சமஸ்கிருதம் : पृथ्वी, pṛthvī, மேலும் पृथिवी, pṛthivī ) "பரந்த ஒன்று" என்பது பூமிக்கான சமஸ்கிருத பெயர் மற்றும் இந்து மதத்தில் ஒரு தேவி (தெய்வம்) மற்றும் புத்த மதத்தின் சில கிளைகளுக்கான பெயருமாகத் திகழ்கிறது. இத்தேவியானவர் பாமி என்றும் அழைக்கப்படுகிறார். அவர் விஷ்ணு மற்றும் தியாஸ் பிடா இருவரின் மனைவியும் ஆவார்.

பிருத்வி மாதா ("அன்னை பூமி") என்ற பெயரிலான இந்த தேவி தியாயுஸ் பிதாவுடன் ("தந்தை வானம்") இணைந்து நிறைவினை உண்டாக்குகிறார்.[1] இருக்கு வேதத்தில், பூமி மற்றும் வானம் ஆகியவை ஒரு இணையான இரட்டையாக, தியாவாபிருத்வி என்று முதன்மையாக கூறப்பட்டுள்ளது.[2] பிருத்து மன்னனின் ஆட்சிக்காலத்தில் கடுமையாக பஞ்சம் நிலவியது. பிருத்து மன்னன் பூமியைப் பிளந்து பழங்களைப் பெற எண்ணினார். இதற்காக பிருத்து மன்னன் பிரம்மாவிடம் இந்த வேண்டுகோளைச் சொல்வதற்காக விண்ணுலகத்திற்குச் செல்லப் புறப்பட்டார். ஆனால் பூமி தேவிக்கு இந்த யோசனையில் உடன்பாடு இல்லை. ஆகவே, பூமித்தாய் பசு உருவமெடுத்து மன்னனைப் பின்தொடர்ந்து அவனிடம் குறுக்கிட விரும்பினார். ஒரு பெண்ணைக் கொல்லத் துணிவது எவ்வகையில் நியாயம் எனக் கேட்ட போது பிருத்து மன்னன் தன் குடிமக்களைக் காப்பாற்றுவதற்காக அவ்வாறு செய்வது பாவமில்லை எனக் கூறினான். பூமி தேவியிடம் இதற்கு மாற்று யோசனை இருந்தது. அதாவது அரசன் ஆணையின் பேரில் தனது பாலினைக் கொண்டு நாட்டின் இழந்த அனைத்து வளத்தையும் மீட்டெடுக்க முடியும் என்று கூறினார். மன்னன் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ள சுவயம்புவா மனு என்ற கன்றினை ஈன்று பூமியில் பாலினைச் சொறிய நாடானது இழந்த பசுமையையும், வளத்தினையும் மீளப் பெற்றது.

வலுவான வரலாற்று இந்து மதத்தின் செல்வாக்கு இருந்தபோதிலும், இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் தேசிய ஆளுமைக்கு இந்த பெயர் பயன்படுத்தப்படுகிறது.

பிருத்வி தேவியின் தோற்றம்

[தொகு]

பிருத்வி தேவியின் தோற்றமானது பின்வரும் விதமாக உள்ளது. தேவி பிருத்வி நான்கு கரங்களுடன் சித்தரிக்கப்படுகிறார். இரண்டு கைகளில் கைக்கு ஒரு தாமரையையும், மற்ற இரண்டு கைகளில், ஒரு கையில் அபய முத்திரையுடனும், மற்றொரு கையில் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டாவாறும் சித்தரிக்கப்படுகிறார்.[3] பிருத்வி தேவி பசுவாகவும், பிருத் காளையாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இத்தகைய வடிவங்களே கடவுளுருக்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே மக்களால் வழிபட்டு வந்த தெய்வ வடிவங்களாக இருந்தன. பின்னர் இடைக்காலத்தில் தெய்வ வடிவங்கள் மனித உருவங்களைப் போன்று சித்தரிக்கப்பட்ட வழிபாட்டு முறை நடைமுறைக்கு வந்தது. அதர்வண வேதத்தில் பிருத்வி தேவியினைப் பற்றி மட்டும் புகழ்ந்து பாடக்கூடிய முழக்கங்கள் அல்லது மந்திரங்கள் உள்ளன. அதர்வண வேதத்தில் வரிகளில் பிருத்வி தேவி இந்திரனின் மனைவியாக வருணிக்கப்படுள்ளார். வேறு சில புராணங்களின்படி, பூதேவி திருமாலின் மூன்றாவது அவதாரமான வராஹாவின் மனைவியாகவும் கருதப்படுகிறார்.

பிருத்வி தேவியின் வேறு பெயர்கள்

[தொகு]

திரா, திரதி, திரித்ரி, விஸ்தவா, மேதினி, இரத்னகர்பா, இரத்னாவதி ஆகியவை இத்தேவிக்கான வேறு பெயர்களாகும்.

புத்த மதத்தில்

[தொகு]

புத்த மதத்தின் நூல்கள் மற்றும் காட்சி பிரதிநிதித்துவங்களில், கவுதம புத்தரைப் பாதுகாத்த மற்றும் அவரது ஞான வெளிப்பாட்டிற்கு சாட்சியாக பிருத்வி குறிப்பிடப்படுகிறார். தொடக்க கால புத்த மதத்தில் பாலி கேனானில் பிருத்வியின் தோற்றம் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. [4]

குறிப்புகள்

[தொகு]
  1. Madhu Bazaz Wangu. Images of Indian Goddesses: Myths, Meanings, and Models. p. 35. "Prithvi is coupled with the sky god Dyaus.
  2. Doniger O'Flaherty 2007, ப. 201, 330.
  3. Pintchman, Tracy (2018-07-19). "Cosmological, Devotional, and Social Perspectives on the Hindu Goddess". Oxford Scholarship Online. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/oso/9780198767022.003.0002. பார்க்கப்பட்ட நாள் 2020-03-01.
  4. Shaw 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருத்வி&oldid=4081413" இலிருந்து மீள்விக்கப்பட்டது