பிரீமியர் பத்மினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரீமியர் பத்மினி
ప్రీమియర్ పద్మిని ట్యాక్సీ, ముంబయి
உற்பத்தியாளர்பிரீமியர் ஆட்டோமொபைல்சு
வேறு பெயர்பத்மினி
பிரீமியர்
உற்பத்தி1964-2000
உடல் வடிவம்4 கதவுகள்
இயந்திரம்ஃபியட் 103 - 1,089 சிசி
செலுத்தும் சாதனம்4 speed manual, rear wheel drive
RelatedFiat 1100D

பிரீமியர் பத்மினி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு மகிழுந்து. 1964 ஆம் ஆண்டிலிருந்து 2000 வரை இது வெளியானது. வால்சந்த் குழுமத்தைச் சேர்ந்த பிரீமியர் ஆட்டோமொபைல்சு லிமிட்டடு நிறுவனம் ஃபியட் நிறுவனத்தினிடம் அனுமதி பெற்று முதலில் ஃபியட் 1100 டிலைட் என்ற பெயரிலும் 1973 முதல் பிரீமியர் பத்மினி என்ற பெயரிலும் இதை விற்பனை செய்தது.

புதிய பொருளாதாரக் கொள்கையால் விளைந்த தாராளமயமாக்கலுக்குப் பின்னர் பிறநாட்டு நிறுவனங்களான சுசுக்கி, ஃபோர்டு, ஹோண்டா, ஹீண்டாய், ஜெனரல் மோட்டார்சு போன்றவற்றின் வருகையால் பிரீமியர் பத்மினி சந்தையிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.

பரவலர் ஊடகங்களில்[தொகு]

பண்ணையாரும் பத்மினியும் என்ற தமிழ்த்திரைப்படத்தில் பத்மினி மகிழுந்தை மையமாக வைத்துக் கதை பின்னப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீமியர்_பத்மினி&oldid=1567451" இலிருந்து மீள்விக்கப்பட்டது