உள்ளடக்கத்துக்குச் செல்

பிரீதி பட்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரீதி பட்கர்
பிரீதி பட்கர்
பிறப்புமும்பை
மற்ற பெயர்கள்பிரீதி தாய், பிரீதி
படித்த கல்வி நிறுவனங்கள்டாட்டா சமூக அறிவியல் கழகம், சமூகப் பணிக்கான நிர்மலா நிகேதன் கல்லூரி
அறியப்படுவதுமும்பையின் சிவப்பு விளக்குப் பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் முன்னோடிப் பணி புரிவது

பிரீதி பட்கர் (Priti Patkar) இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகரும் மனித உரிமை ஆர்வலரும் ஆவார். கட்டாயப் பால்வினைத் தொழில் மற்றும் கடத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக இந்தியாவின் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதிகளில் முன்னோடிப் பணிகளைச் செய்துவரும் "பிரேரானா" என்ற அமைப்பின் இணை நிறுவனரும் இயக்குநரும் ஆவார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

பிரீதி பட்கர் மும்பையில் பிறந்தார். இவரது தந்தை ஒரு அரசு ஊழியர். இவரது தாயார் ஒரு தினப்பராமரிப்பு திட்டத்தை நடத்தி வந்தார்.[1] மும்பையின் டாட்டா சமூக அறிவியல் கழகத்தில் சமூக அறிவியலில் தங்கப் பதக்கம் வென்ற இவர், சமூகப் பணிகளில் முதுகலைப் படிப்பையும் முடித்தார்.[2] இவர் சமூக ஆர்வலர் பிரவீன் பட்கர் என்பவரை மணந்தார்.[3]

செயல்பாடுகள்

[தொகு]

30 ஆண்டுகளுக்கும் மேலாக மனித கடத்தல் மற்றும் வணிக ரீதியான பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபடும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மீட்புக்காக இவர் பணியாற்றி வருகிறார்.[4] காமாத்திபுரா சிவப்பு விளக்குப் பகுதிக்கு சமூகப் பணிகளில் தனது முதுநிலை ஆய்விற்கான வருகைக்குப் பின்னர், 1986ஆம் ஆண்டில் இவர் "பிரேரானா"வை நிறுவினார் - அங்கு மூன்று தலைமுறை பெண்கள் ஒரே தெருவில் வாடிக்கையாளர்களைக் எதிர்பார்த்து நின்றிருப்பதைக் கண்டார்.[5] பின்னர், இவர்களின் பாதுகாப்புக்காக அதிக எண்ணிக்கையிலான சட்ட தலையீடுகளையும் மனுக்களையும் அளித்து வருகிறார்.[6][7]

ஆராய்ச்சி

[தொகு]

பட்கர் 7 புத்தகங்கள் மற்றும் பல ஆராய்ச்சி அறிக்கைகளைக் கொண்டுள்ளார் - தேசிய பெண்கள் ஆணையம், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் / சர்வதேச குடும்ப சுகாதார நிறுவனம் ஆகியவற்ரின் உதவியுடன் வெளியிட்டது. மற்ற நூல்களுக்கு குரூப் டெவலப்மெண்ட் (பிரான்ஸ்), கன்சர்ன் இந்தியா பவுண்டேஷன், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் போன்ற பல நிறுவனங்கலால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.[8] பிரேரனா மூலம், காமாத்திபுரா சிவப்பு விளக்குப் பகுதிகளின் வீழ்ச்சிக்காக 2010 முதல் முறையாக முயற்சி செய்து வருகிறார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Priti Patkar Profile". Archived from the original on 12 May 2014. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  2. "Unsung heroes". Archived from the original on 13 May 2014. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  3. "Priti & Pravin Patkar". Archived from the original on 12 May 2014. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  4. "Saving children". www.theweekendleader.com (in ஆங்கிலம்). Archived from the original on 15 February 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-02-19.
  5. Mumbai, Arunima Rajan in (2014-11-26). "How Prerana's Priti Patkar has changed the lives of sex workers' children". the Guardian (in ஆங்கிலம்). Archived from the original on 20 February 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-02-19.
  6. "Woman of substance". Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  7. "Woman of Might". Archived from the original on 3 May 2014. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  8. "Priti Patkar Books". Archived from the original on 3 May 2014. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  9. "Kamathipura: bought and sold – Livemint". www.livemint.com. Archived from the original on 19 February 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-02-19.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீதி_பட்கர்&oldid=4169318" இலிருந்து மீள்விக்கப்பட்டது