பிரியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரியான் (Freon) என்பது வேதிச்சேர்மங்களைத் தயாரிக்கக்கூடிய ஒரு நிறுவனத்தின் பதிவுசெய்யப்பட்ட வணிகச் சின்னம் ஆகும்.  இந்த நிறுவனம் தனது வணிகப் பெயரை பல ஆலோகார்பன் விளைபொருட்களுக்கு பயன்படுத்தியுள்ளது. இவை நிலையான,  எளிதில் தீப்பற்றாத,  நடுநிலையான நச்சுத்தன்மை கொண்ட வாயுக்களாகவோ,திரவங்களாகவோ காணப்படுகின்றன. இவை, எடுத்துக்காட்டான குளிர் பதனூட்டிகளாகவும், துாசுக்காற்று செலுத்துபொருளாகவும் பயன்படுகின்றன. இவை ஓசோன் குறைபாட்டை (குளோரோடைபுளோரோமீத்தேன் போன்ற), குளோரோபுளோரோகார்பன்களில்(CFCs) ஒன்றான ஐதேராகுளோரோபுளோரோகார்பன் (HCFC) போன்றவற்றை உள்ளடக்கியைவை ஆகும்.[1] ப்ரியான் எனப்படுவது ஒரு வணிகப்பெயராக இருப்பதால் இந்த  வகையைச்  சேர்ந்த  அனைத்து  குளிர் பதனூட்டிகளும் "ப்ரியான்" எனப் பெயரிடப்படுவதில்லை. R-12, R-13B1, R-22, R-502, மற்றும் R-503 போன்ற ப்ரியான்கள் கெமார்சு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டாலும் இப்பெயரைக் கொண்டிருப்பதில்லை. அளவு கண்காணிக்கப்படும் மூச்சிழுக்கும் மருந்துக் குப்பியிலும் (Metered-dose inhalers MDI), தூசு செலுத்தும் கருவியிலும் பயனப்படுத்தப்படுகின்ற, ஐதரோபுளோரோஆல்கேனானது கண்டறியப்பட்டுள்ளது. இது ஓசோன் படலத்தில் குறையேற்படுத்தாத பதிலியாக செயல்படுகிறது.

வரலாறு[தொகு]

முதல் குளோரோபுளோரோகார்பனானது பிரெடெரிக் சுவார்ட்சு என்பவரால் 1890 களில் தொகுப்புமுறையில் தயாரிக்கப்பட்டது. 1920 களின் பிற்பகுதியில், அந்தக் காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்த அம்மோனியா போன்ற ஆபத்தான குளிர் பதனுாட்டிகளுக்கு மாற்றுப்பொருளொன்றைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு ஆய்வுக்குழுவானது, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் உள்ள சார்லசு பிராங்க்ளின் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்தக்குழுவிற்கு தாமசு மிட்கிளே ஜுனியர் என்பவர் தலைமை தாங்கினார் [2] 1928 ஆம் ஆண்டில் இந்தக்குழுவானது குளோரோபுளோரோகார்பனின் தொகுப்பு முறையினை மேம்படுத்தினர். மேலும், அவர்கள் இதன் உபயோகத்தன்மை, நிலைப்புத்தன்மை மற்றும் நச்சில்லா தன்மை ஆகியவை விளக்கிக்கூறப்பட்டது. கெட்டரிங் இந்த வாயுவை குளிர் பதனூட்டியாகப் பயன்படுத்துவதற்கான குளிர்சாதனப் பெட்டி ஒன்றை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். இந்த காப்புரிமையானது ஃபிரிஜிடேர் என்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.[3]

1930 ஆம் ஆண்டில், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டுபாண்ட் ஆகியோர் இயங்கு வேதிப்பொருட்களை பிரியான் தயாரிப்பதற்காக உருவாக்கினர் இந்த விளைபொருளானது, டைகுளோரோபுளோரோமீத்தேன் ஆகும். இந்த சேர்மமானது இப்போது "ஃபிரியான்-12", "R-12", அல்லது "CFC-12" என அழைக்கப்படுகிறது. R என்ற ஆங்கில எழுத்துக்குப் பின்னர் குறிப்பிடப்படும் எண்ணானது குளிர் பதனுாட்டியின் வகை எண்ணாகும். இது டுபாண்ட் என்பவரால் ஆலசனேற்றம் செய்யப்பட்ட ஐதரோகார்பன்களை முறைப்படி அடையாளப்படுத்தவும், ஆலோகார்பன்களுக்குப் பிறகு வேறு குளிர்பதனுாட்டிகளைப் பிரித்தறியவும் பயன்படுத்தப்பட்டது. தற்போது, ஆகத்து 1987 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மாண்ட்ரியால் பிரகடனத்திற்குப் பிறகு, குளோரோபுளோரோகார்பன்களின் (ஓசோன் படல குறைபாட்டிற்கு காரணமாக இருப்பதால்) பெரும்பாலான பயன்பாடுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டோ அல்லது கடுமையாக வரையறுக்கப்பட்டோ உள்ளன.[4] ஃப்ரியான்களிலிலிருந்து வருவிக்கப்பட்ட ஐதரோபுளோரோகார்பன்கள் (HFCs) ப்ரியான்களின் பல்வேறு பயன்களை இடப்பெயர்ச்சி செய்தன. ஆனாலும், ஐதரோபுளோரோகார்பன்கள் மீ பைங்குடில் வளிமங்களாகக் கருதப்பட்டதால், கியோட்டோ பிரகடனத்திற்குப் பிறகு, மிகுந்த கட்டுப்பாடுகளுக்குட்படுத்தப்பட்டதாகவே இருந்தன. இவை துாசு செலுத்திகளில் பயன்படுத்தப்படுது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு விட்டது. ஆனால், நாளது தேதி வரை, ஆலோகார்பன்களுக்கு மாற்றான நச்சுத்தன்மையற்ற, எளிதில் தீப்பற்றாத வாயுக்கள் கண்டறியப்படாததால் பிரியான்களுக்காக வடிவமைக்கப்பட்டவற்றில் மிகச்சிறிதளவு இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு[தொகு]

பொருள் பாதுகாப்பு தரவு தாள்களின் படி, CFC கள் மற்றும் HCFC க்கள் நிறமற்ற, எளிதில் ஆவியாகக்கூடிய, நச்சுத்தன்மையற்ற திரவங்கள் மற்றும் வாயுக்கள் ஆகும். இவை மென்மையான இனிப்புச்சுவை மற்றும் ஈதரின் வாசனை கொண்டவையாக உள்ளன. 11% அல்லது அதற்கு மேற்பட்ட செறிவூட்டல்களில் அதிகளவு மயக்கம், கவன இழப்பு, மைய நரம்பு மண்டல மன அழுத்தம் மற்றும் / அல்லது இதயத்துடிப்பின் சீர்பிறழ்வுகள் ஏற்படலாம். இவற்றின் ஆவியானது, காற்றை இடப்பெயர்ச்சி செய்கின்றன. மேலும், அடைபட்ட வெளிகளில் மூச்சுத்திணறல் ஏற்படலாம்.[5] எளிதில் தீப்பற்றாதவையாக இருப்பினும், இவற்றின் எரிதல் விளைபொருட்கள் ஐதரோபுளோரிக் அமிலம் மற்றும் அதனையொத்த சேர்மங்களை உருவாக்குகின்றன.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியான்&oldid=2749136" இருந்து மீள்விக்கப்பட்டது