பிரிடினியம் பெர்புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிடினியம் பெர்புரோமைடு
இனங்காட்டிகள்
39416-48-3
பப்கெம் 11983801
பண்புகள்
C5H6Br3N
வாய்ப்பாட்டு எடை 319.82 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பிரிடினியம் பெர்புரோமைடு (Pyridinium perbromide) என்பது C5H6Br3N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிரிடினியம் புரோமைடு பெர்புரோமைடு, பிரிடின் ஐதரோபுரோமைடு பெர்புரோமைடு, பிரிடினியம் டிரைபுரோமைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. பிரிடினியம் நேர் அயனியும் டிரைபுரோமைடு எதிர் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. புரோமின் சேர்ந்துள்ள பிரிடின் மற்றும் ஐதரசன் புரோமைடின் உப்பாக இதை நோக்கும் போது பிரிடினியம் புரோமைடைக் கொண்டுள்ள ஓர் அணைவுச் சேர்மமாகவும் பிரிடினியம் பெர்புரோமைடைக் கருதமுடிகிறது. ஒரு திண்மமாகக் காணப்படும் இச்சேர்மத்தின் வினைகள் புரோமினை ஒத்த வினைகள் போல உள்ளன. இதனால் இதுவும் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றும் முகவராக ஆலசனேற்றும் வினைகளில் மின்னணுகவரி புரோமின் மூலமாகப் பயன்படுத்தப்படுகிறது [1]. குயினோலின் சேர்மமும் இதேபோல செயற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் [2]

தயாரிப்பு[தொகு]

பிரிடினியம் ஐதரோபுரோமைடுடன் புரோமின் அல்லது தயோனைல் புரோமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் பிரிடினியம் பெர்புரோமைடு உருவாகிறது [3].

பண்புகள்[தொகு]

படிகவடிவத்தில் சிவப்பு நிறமான திண்மமாக பிரிடினியம் பெர்புரோமைடு காணப்படுகிறது.[1] which is virtually insoluble in water.[4]

பயன்கள்[தொகு]

கீட்டோன்கள், பீனால்கள், ஈதர்கள் போறவற்றை புரோமினேற்றம் செய்யும் முகவராக பிரிடினியம் பெர்புரோமைடு பயன்படுகிறது [4].

ஒரு நிலையான திண்மம் என்பதால் இதை எளிதாகக் கையாள முடிகிறது. துல்லியமாக எடை போட்டு பயன்படுத்த முடிகிறது. குறிப்பாக சிறு அளவிலான வேதிவினைகளில் பயன்படுத்தக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பண்புகளைக் இச்சேர்மம் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக 3- கீட்டோசிடீராய்டை 1 2,4-டைபுரோமோகோலெசிடானோனாக 2 மாற்றும் வினையைக் கூறலாம்:[1]

3-கீட்டோசிடீராய்டின் புரோமினேற்ற வினை
3-கீட்டோசிடீராய்டின் புரோமினேற்ற வினை

.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Djerassi, Carl; Caesar R. Scholz (January 1948). "Brominations with Pyridine Hydrobromide Perbromide". Journal of the American Chemical Society 70 (1): 417–418. doi:10.1021/ja01181a508. 
  2. Smalley, Robert K. (2009). "3. Haloquinolines". in Jones, Gurnos. The Chemistry of Heterocyclic Compounds, Quinolines. Wiley. பக். 615. 
  3. (in German) Houben-Weyl Methods of Organic Chemistry. 4: Bromine and Iodine Compounds (4th ). Georg Thieme Verlag. 2014. பக். 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-13-180014-5. https://books.google.com/books?id=BCuGAwAAQBAJ&pg=PA35. 
  4. 4.0 4.1 Pyridine hydrobromide perbromide, tech. 90% data sheet from AlfaAesar, accessed August 13 2017.