பிரிசுகில்லா பேக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரிசுகில்லா குளோரியா உலோரைன் பேக்கர்
Priscilla Gloria Lorraine Baker
பிறப்புதெனாப்பிரிக்கா, கேப் டவுன்
தேசியம்தென்னாப்பிரிக்கா
துறைபகுப்பாய்வு வேதியியல், மின்வேதியியல், நானோ அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல்
பணியிடங்கள்வெசுட்டர்ன் கேப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கேப் டவுன் பல்கலைக்கழகம்
வெசுட்டர்ன் கேப் பல்கலைக்கழகம்
சிடெல்லன் போசு பல்கலைக்கழகம்

பிரிசுகில்லா பேக்கர் (Priscilla Baker) தென்னாப்பிரிக்காவின் மேற்கு கேப் மாகாணம் பெல்வில்லே நகரத்திலுள்ள வெசுட்டர்ன் கேப் பல்கலைக்கழகத்தில் பகுப்பாய்வு வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பொருட்கள் மற்றும் உணரிககளின் மின்னியக்கவியலை கையாளும் மின் வேதியியல் ஆராய்ச்சி தளமான உணரி ஆய்வகத்தின் இணைத் தலைவியாகவும் உள்ளார். மேலும் இவர் தென்னாப்பிரிக்காவின் அறிவியல் அகாதமி, செயற்கை தசைகளுக்கான ஐரோப்பிய அறிவியல் வலைப்பின்னல் மற்றும் மேரி கியூரி பன்னாட்டு பணியாளர் பரிமாற்றத் திட்டம்[1] ஆகிய அமைப்புகளில் தீவிர செயல் உறுப்பினராக உள்ளார். [2]

தொழில்[தொகு]

கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் பேக்கர் தனது இளநிலை அறிவியல் பட்டத்தைப் பெற்றார். பெருங்கடல் மற்றும் வளிமண்டல அறிவியலில் தனது வகுப்பில் ஒரே ஒரு கருப்பின பெண்ணாக தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. பின்னர் கேப் பெனின்சுலா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேக்கர் பகுப்பாய்வு வேதியியலில் தனது தேசிய பட்டயப் படிப்பை முடித்தார். மின் வேதியியல் பிரிவில் ஆர்வம் கொண்ட இவர் தனது இளம் அறிவியல் ஆனர்சு (வேதியியல்) படிப்பைத் தொடர்ந்தார். வெசுட்டர்ன் கேப் பல்கலைக்கழகத்தில் வளிமண்டலத்தில் சுவடு உலோகங்களை மதிப்பீடு செய்வதில் தனது முதுநிலை அறிவியல் ஆய்வுக் கட்டுரையை (வேதியியல்) வெற்றிகரமாக முடித்தார். 2004 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவிலுள்ள சிடெல்லன் போசு பல்கலைக்கழகத்தில் பீனால் தரங்குறைப்பு வினைக்கான புதிய வெள்ளீய ஆக்சைடு கூட்டு நேர்மின்வாய் பகுதியில் தனது வேதியியல் முனைவர் பட்டத்தைப் பெற்றார். [3]

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் வருடாந்திர மகளிர் அறிவியல் விருது வழங்கும் விழாவில், இயற்பியல் மற்றும் பொறியியல் அறிவியல் பிரிவில் சிறப்பு பெண் விஞ்ஞானி விருதை பேக்கர் 2014 ஆம் ஆண்டு பெற்றார். [4]

பேக்கர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்க சிசுட்டம்சு பகுப்பாய்வு மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Priscilla Baker" (en-us). பார்த்த நாள் 22 January 2018.
  2. "Members" (en-gb). பார்த்த நாள் 22 January 2018.
  3. "UWC's Prof Priscilla Baker wins Women in Science Award" (en-us). பார்த்த நாள் 22 January 2018.
  4. "Women in Science Awards winners making their mark" (en-us). பார்த்த நாள் 22 July 2019.
  5. "Priscilla Baker takes over reins at SASAC" (en-us). பார்த்த நாள் 22 July 2019.