பிரிகையாக்கிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இம்மரத்தில் முளைத்திருக்கும் பங்கசுக்கள்; பிரிகையாக்கிகள்

பிரிகையாக்கிகள் (Decomposer) என்பவை அழுகி வரும் அல்லது இறந்த உயிரங்கிகளை பிரிகையாக்கும் ஒருவகை உயிரங்கிகளின் கூட்டம் ஆகும்[1]. பக்டீரியா, பங்கசு போன்றவை இக்கூட்டத்தைச் சார்ந்தவை. இவை தாம் சுரக்கும் நொதியங்கள் மூலம் பெரிய மூலக்கூறுகளை உடைத்து சிறு சிறு மூலக்கூறுகளாகப் பிரிகையடையச் செய்து எளிய சேதனப் பதார்த்தமாக மாற்றும் ஆற்றல் படைத்தவை. சேதனப் பதார்த்தங்களை பிரிகையாக்கல் எனும் செயற்பாட்டால் அசேதனப் பதார்த்தமாக மாற்றுகின்றன, பின் அவ்வசேதனப் பதார்த்தம் காற்றினாலோ, நீரினாலோ, நிலத்தினாலோ உள்ளெடுக்கப்பட்டு மீண்டும் சூழலுக்குள் போய்ச் சேருகின்றது. குப்பை கூளங்களை எரித்தல், மண்ணில் விவசாய இரசாயனங்களைச் சேர்த்தல் போன்ற செயற்பாடுகளால் பிரிகையாக்கிகள் எளிதில் அழிந்து விடக்கூடியன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிகையாக்கிகள்&oldid=3563591" இருந்து மீள்விக்கப்பட்டது