பிராங்க் அபாக்னேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிராங்க் அபாக்னேல்
Frank Abagnale (cropped).jpg
2007 இல் அபாக்னேல்
பிறப்புபிராங்க் வில்லியம் அபாக்னேல், இளையவர்
Frank William Abagnale, Jr.

ஏப்ரல் 27, 1948 (1948-04-27) (அகவை 72)
பிரான்க்சுவில், நியூயார்க்
பணிமு.செ.அ அபாக்னேல் & அசோசியேட்சு
குற்றச்செயல்போலி ஆவணத் தயாரிப்பு, மோசடி
Criminal penaltyபிரெஞ்சு சிறையில் ஓர் ஆண்டு,
சுவீடன் சிறையில் ஓர் ஆண்டு,
அமெரிக்க சிறையில் 4 ஆண்டுகள்
வாழ்க்கைத்
துணை
கெல்லி
பிள்ளைகள்ஸ்காட், கிரிசு, சான்

பிராங்க் வில்லியம் அபாக்னேல், இளையவர் (Frank William Abagnale, Jr. பிறப்பு: ஏப்ரல் 27, 1948) அமெரிக்காவின் பிரபலமான பாதுகாப்பு ஆலோசகர். தனது 15 ஆவது வயது முதல் 21 ஆம் வயது வரை விமானியாக, டாக்டராக, வக்கீலாக, சிறை அதி காரியாக, காவல்துறை அதிகாரியாக, கல்லூரி விரிவுரையாளராக என பல ஆள் மாறாட்ட வேலைகளை[1] செய்து பல லட்சம் டாலர்கள் ஏமாற்றினார்.[2]

ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான நாட்கள் அமெரிக்க சிறையில் கழித்த இவர் பின் மனம் திருந்தி அபாக்னேல் மற்றும் அசோசியேட்ஸ் என்ற நிதி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.[3]

அபாக்னேலின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் எடுத்த ‘கேட்ச் மி இஃப் யூ கேன்' திரைப்படம் வசூலில் சாதனை புரிந்தது.[4] லியோனார்டோ டிகாப்ரியோ இத்திரைப்படத்தில் அபாக்னேலாக நடித்திருந்தார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அபாக்னேல் சீனியர் என்பவரின் நான்கு குழந்தைகளில் ஒருவரான அபாக்னேலுக்கு 12 வயதானபோது பெற்றோருக்குள் விவாகரத்து நடந்தது. இவரது குடும்பம் நியூயார்க் நகரில் வசித்து வந்தது.[5][6] அபாக்னேல் தனது முதல் மோசடியை தனது தந்தையிடமே அரங்கேற்றினார். தன்னுடைய 16-வது வயதில் முதன்முதலில் அப்பாவின் கிரெடிட் கார்டு மூலம் 3,400 டாலர்கள் மோசடி செய்தார்.

வங்கி மோசடிகள்[தொகு]

வங்கிகளில் பொய்யான பெயரில் கணக்கு தொடங்கி போலி காசோலைகள் மூலம் பல லட்சம் அமெரிக்க டாலர்கள் ஏமாற்றினார். போலி காசோலை தொடங்கி வாடிக்கையாளர் பணம் டெபாசிட் செய்யும் பொழுது தனது அக்கவுன்டிலேயே டெபாசிட் செய்ய வைப்பது என எண்ணற்ற வழிமுறைகளில் ஏமாற்றி பணம் சம்பாதித்தார்.[7]

ஆள் மாறாட்டம்[தொகு]

விமானியாக[தொகு]

அபாக்னேல் உலகம் முழுவதும் இலவசமாக பறக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. இதை செயல்படுத்த அவர் தேர்தெடுத்தது 'பான் ஆம்’ என்கிற பிரபலமான விமான நிறுவனத்தை.

போலி அடையாள அட்டை தயாரித்து பயிற்சி விமானி என்கிற போர்வையில் விமானங்களில் பறக்கத் தொடங்கிய அபாக்னேல் 26 நாடுகளுக்கு 250 பயணங்களை மேற்கொண்டார். அவரது பயணங்களின் பொழுது நிறுவனத்தின் செலவிலேயே ஹோட்டல்களில் தங்கிகொண்டார். ஒருமுறை 30 ஆயிரம் அடி உயரத்தில் 140 பயணிகளுடன் பறந்த விமானத்தை இயக்க இவன் அனுமதிக்கப்பட்டபோது ஆட்டோ பைலட் முறையில் விமானத்தை இயக்கினார். ஆனால் 140 பயணிகளின் உயிரோடு விளையாடியது அவரது மனதை மாற்றியது. தனது உண்மை அடையாளத்தை கூறி பணியிலிருந்து விடுபட்டார். அதுவரை ஒரு விமானிக்கு உரிய சம்பளம் மற்றும் அத்தனைச் சலுகைகளையும் அனுபவித்தார்.[8]

மருத்துவராக[தொகு]

போலியாக டாக்டர் சான்றிதழ் தயாரித்துக் கொண்டு ஒரு ஒரு பெரிய மருத்துவமனையில் மேற்பார்வையாளர் வேலையில் சேர்ந்தார். அந்த வேலையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கத் தேவையில்லை என்றாலும் ஒருநாள் அவசர நோயாளியாக சேர்க்கப்பட்ட ஒரு குழந்தைக்கு வைத்தியம் பார்க்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. எப்படியோ மருத்துவமனையில் இருந்த மருத்தவ மாணவர்களை வைத்து குழந்தைக்கு வைத்தியம் பார்த்தார். எனினும் மனசாட்சி உறுத்தவே அந்த வேலையில் இருந்தும் விலகினார்.

வழக்கறிஞராக[தொகு]

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றதை போன்று போலி ஆவணம் மூலம் சில காலம் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

பிடிபடல் மற்றும் தண்டனை காலம்[தொகு]

1969 ஆம் ஆண்டு ஏர் பிரான்ஸ் நிறுவனத்தில் பணிபுரித்த இவரது முன்னால் காதலி இவரை அடையாளம் கண்டு போலீஸிடம் பிடித்து கொடுத்தார். கோர்ட் விசாரனைக்கு பின் ஆறு மாத சிறை தண்டனை அனுபவித்தார். பின் ஸ்வீடனிலும் ஆறு மாத சிறை தண்டனை அனுபவித்தார். பின் அமெரிக்காவின் நெருக்குதலால் நாடுகடத்தப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டர். அமெரிக்க கோர்ட் 12 ஆண்டு சிறை தண்டனை விதித்தது எனினும் 5 வருடங்களில் சிறையில் இருந்து வெளியிடப்பட்டார்.

பிற்கால வாழ்கை[தொகு]

சிறையில் இருந்து விடுதலையான அபாக்னேல் சில வேலைகளில் சேர்ந்தான். எனினும் இவரது குற்றப் பின்னணி தெரிந்ததும் உடனே வேலையைவிட்டு நிறுத்தினார்கள். மனம் நொந்துபோன அபாக்னேல் தன் ஏமாற்றும் திறனை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடிவெடுத்தார். பின் ஒரு வங்கியின் அதிகாரியை அணுகி தனது முலுவரலாற்றையும் கூறி அந்த வங்கியின் பணியாளர்கள் அனைவருக்கும் மோசடிகளை எப்படி தடுப்பது என்ற பயிற்சி தர விரும்புவதாக கூறினார்.

அதிகாரியும் ஏற்றுகொள்ளவே ஊழியர்களுக்கு 500 டாலர் கட்டணத்தில் பயற்சி அளித்தார்.[9] பின்பு அபாக்னேல் மற்றும் அசோசியேட்ஸ் என்ற நிதி நிறுவனங்கள் ஏமாறாமல் இருக்க ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.இவரது நிறுவனம் இன்று சுமார் 14,000 நிறுவங்களுக்கு பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.[10]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்க்_அபாக்னேல்&oldid=2697801" இருந்து மீள்விக்கப்பட்டது