பிரனாய் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரனாய் குமார்
நேர்முக விவரம்
பெயர்பிரனாய் அசீனா சுனில் குமார்
பிறந்த தேதிசூலை 17, 1992 (1992-07-17) (அகவை 27)
பிறந்த இடம்தில்லி, இந்தியா
உயரம்5’ 9”
நாடு இந்தியா
கரம்வலது
பயிற்சியாளர்இந்தியா புல்லேலா கோபிசந்த்
ஆடவர் ஒற்றையர்
பெரும தரவரிசையிடம்34(6 மார்ச்சு 2014)
தற்போதைய தரவரிசை50(7 ஆகத்து 2014)
BWF Profile

பிரனாய் அசீனா சுனில் குமார் (Prannoy Haseena Sunil Kumar, 17 சூலை 1992) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட விளையாட்டுக்காரர் ஆவார்.[1] 2010இல் சிங்கப்பூரில் நடந்த இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சிறுவர் ஒற்றையர் நிகழ்வில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.[2] 2011இல் இந்தியா சூப்பர் தொடரிலும் 2012இல் ஆசிய இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.

செப்டம்பர் 14, 2014 அன்று இந்தோனேசியாவின் மாஸ்டர்சு கிரான் பிரீ கோல்டு போட்டியில் பங்கேற்று தனது வாழ்நாளில் முதன்முறையாக முதலிடத்தை வென்றுள்ளார்; இப்போட்டியின் இறுதியாட்டத்தில் உள்ளூர் விருப்பமான வீரர் பிர்மன் அப்துல் கோலிக்கை 21-11,22-20 என்ற கணக்கில் தோற்கடித்து அமெரிக்க டாலர் 1,25,000 வென்றுள்ளார்.[3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Player Profile". BAI. பார்த்த நாள் 29 August 2012.
  2. Savaliya, Gautam. "Prannoy Haseena Sunil Kumar Singapore Youth olympics 2010". பார்த்த நாள் 29 August 2012.
  3. "இந்தோனேசிய மாஸ்டர்ஸ்: முதல்முறையாக பிரணாய் சாம்பியன்". தினமணி (14 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 15 செப்டம்பர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரனாய்_குமார்&oldid=2720518" இருந்து மீள்விக்கப்பட்டது