பிரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதம்
நிறுவனர்மாதவ் சவான், பரீதா லம்பே
வகைஇலாப நோக்கமற்றது
தலைமையகம்மும்பை, புது தில்லி
தலைமையகம்
  • பன்னாட்டு நிலை
சேவை பகுதி
இந்தியா
Chief Executive Officer
முனைவர். ருக்மணி பானர்ஜி
வலைத்தளம்pratham.org

பிரதம் (Pratham) இந்தியாவின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்புகளில் ஒன்றாகும்.[1] சமூக ஆர்வலராகவும் தொழில் முனைவோராகவும் அறியப்படும் மாதவ் சவான் மற்றும் பரீதா லம்பே[2] ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டது. இந்தியாவின் பின்தங்கிய குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க இது செயல்படுகிறது. சேரிகளில் உள்ள குழந்தைகளுக்கு முன்பள்ளிக் கல்வியை வழங்குவதற்காக 1995 ஆம் ஆண்டில் மும்பையில் நிறுவப்பட்ட பிரதம் இன்று இந்தியாவின் 23 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப்பிரதேசங்களில் பரவியுள்ளது மேலும் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, சுவீடன்[3] மற்றும் ஆத்திரேலியா[4] ஆகிய நாடுகளில் துணைத் துறைகளைக் கொண்டுள்ளது.[5]

பிரதமின் நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான மாதவ் சவான், 2011 ஆம் ஆண்டு சமூக தொழில்முனைவோருக்கான ஸ்கோல் விருதைப் பெற்றார்.[6] மேலும், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான பின்தங்கிய குழந்தைகளின் கற்றல் தேவைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததன் விளைவாக, மேம்பாட்டு ஒத்துழைப்பில் 2013 பிபிவிஏ அறக்கட்டளை அறிவு எல்லைகள் விருதைப் பெற்றார். வாசிக்கும் திறனை விரைவுபடுத்தும் புதிய முறைகளை வடிவமைத்து செயல்படுத்தியுள்ளனர். ஒரு அடித்தள நிலையிலான அணுகுமுறையைப் பயன்படுத்தி, மாணவர்களின் வயதிற்குப் பதிலாக உண்மையான நிலைகள் மற்றும் தேவைகளால் குழுக்களாக தொகுக்கப்படுகிறார்கள். இந்த அமைப்பு தன் திட்டங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு குறிப்பிட்ட பயிற்சியை வழங்குகிறார்கள். 2018 ஆம் ஆண்டில், பிரதமிற்கு லூயி சே வூ பரிசு வழங்கப்பட்டது, இது மனிதகுலத்திற்கு பயனளிக்கும் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் பல்துறையிடைக் கண்டுபிடிப்பு பரிசு ஆகும். கல்வியறிவின்மையை ஒழிப்பதில் கவனம் செலுத்திய நேர்மறை ஆற்றல் பிரிவில் பிரதம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.[7]

வரலாறு.[தொகு]

இந்தியாவின் மும்பையில் கணித வகுப்பு நடத்தப்படுகிறது, ஆகஸ்ட்-நவம்பர் 2010 [8]

இந்தியாவின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதற்காக அரசு, பெருநிறுவனங்கள் மற்றும் குடிமைச் சமூகம் இவற்றிற்கிடையே முத்தரப்பு கூட்டாண்மையை ஏற்படுத்துவதற்காக யுனிசெஃப் முதலில் மும்பையில் பம்பாய் கல்வி முன்முயற்சியைத் தொடங்கியது. இது 1995 ஆம் ஆண்டில் பிரதம் ஒரு தன்னிச்சையான தொண்டு நிறுவனமாக உருவாக வழிவகுத்தது.

மும்பையின் சேரிகளில் முன்பருவக் கல்வி வகுப்புகளை (கல்விக்கு முந்தைய வகுப்புகள்) நடத்துவதன் மூலம் பிரதம் தன் செயல்பாடுகளைத் தொடங்கியது. கோயில்கள், அலுவலகங்கள் மற்றும் மக்களின் வீடுகள் உட்பட சமூக அமைப்புகுள் உள்ள இடங்களில் கற்பிக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். பிரதம் முன்பருவப் பள்ளி வகுப்புகள் பெருகி மற்ற இடங்களிலும் பின்பற்றப்பட்டன. [9]

முன்பள்ளி வகுப்பு, மும்பை, இந்தியா, ஆகஸ்ட்-நவம்பர் 2010 [8]

இலக்கு[தொகு]

"பள்ளியில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நன்கு கற்றுக்கொள்வது" என்பதே இதன் பிரதான நோக்கமாகும். உலகின் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட இந்தியாவின் ஏழைகளின் எழுத்தறிவு அளவை அதிகரிப்பதன் மூலம், இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக சமத்துவத்தை மேம்படுத்துவதே பிரதம் அமைப்பின் நோக்கமாகும். இது நிலையான மற்றும் மறுஉருவாக்கம் செய்யக்கூடிய குறைந்த கட்டண கல்வி மாதிரிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.[10]

பணி[தொகு]

கல்வியின் ஆண்டுத் தரநிலை அறிக்கை (Annual Status of Education Report) என்பது நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற மாவட்டத்திலும் குழந்தைகளின் பள்ளி நிலை மற்றும் அடிப்படை கற்றல் முடிவுகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் ஒரு வீட்டு அடிப்படையிலான கணக்கெடுப்பாகும். இக்கணக்கெடுப்பு என்பது 2005 முதல் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 அமைப்புகளையும் 25,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களையும் உள்ளடக்கிய ஒரு மகத்தான பங்கேற்பு பயிற்சியாகும். கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, மாவட்ட, மாநில மற்றும் தேசிய மட்டங்களில் குழந்தைகளின் பள்ளி மற்றும் கற்றல் நிலை குறித்த மதிப்பீடுகள் உருவாக்கப்படுகின்றன. இன்று இந்தியாவில் கிடைக்கும் குழந்தைகளின் கற்றல் முடிவுகள் குறித்த தரவுகளின் ஒரே வருடாந்திர ஆதாரமாக இந்த அறிக்கை உள்ளது, மேலும் இந்தியாவில் கல்வி குறித்த விவாதங்களின் கவனத்தை உள்ளீடுகளிலிருந்து விளைவுகளுக்கு மாற்றியதற்காக பெரும்பாலும் பாராட்டப்படுகிறது. இந்த அறிக்கையின் மாதிரி மூன்று கண்டங்களில் உள்ள பதினான்கு பிற நாடுகளால் பயன்படுத்தத் தழுவப்பட்டுள்ளது. இந்த நாடுகள் இயல்பாக ஒன்றிணைந்து கற்றலுக்கான மக்கள் நடவடிக்கை (PAL) வலையமைப்பை உருவாக்கியுள்ளன, நைரோபியில் ஒரு செயலகம் உள்ளது.[11]

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் கல்விச் சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும், தரமான கல்வி இன்னும் ஒரு கவலைக்குரிய நிலையிலேயே உள்ளது, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களிடையே.[12] 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் 50% பேர் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாகப் பள்ளிக்குச் சென்ற போதிலும், அவர்களால் அடிப்படை கணிதத்தைப் படிக்கவோ எழுதவோ முடியவில்லை.[13] எனவே 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் வாசிப்பு, எழுதுதல் மற்றும் அடிப்படை எண்கணித திறன்களை மேம்படுத்துவதற்காக 2007 ஆம் ஆண்டில் ரீட் இந்தியா தொடங்கப்பட்டது, இது பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்படுகிறது, அவர்களுக்கு பிரதம் பயிற்சி அளிக்கிறார். ரீட் இந்தியா இன்று வரை சுமார் 34 மில்லியன் குழந்தைகளை எட்டியுள்ளது, இதன் விளைவாக இந்தியாவின் பல மாநிலங்களில் கல்வியறிவு நிலைகளில் பெரிய அளவிலான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.[14]

குழந்தைகளுக்கான மலிவு விலையிலான, தரமான புத்தகங்களை வெளியிடும் இலாப நோக்கற்ற அமைப்பான பிரதம் புக்ஸ், ரீட் இந்தியாவை பூர்த்தி செய்வதற்காக 2004 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது 10 இந்திய மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட அசல் தலைப்புகளை வெளியிட்டுள்ளது மற்றும் 14 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை சென்றடைந்துள்ளது.

நேரடி திட்டங்கள்ஃ பால்வாடிகள் (பள்ளிக்கு முந்தைய கல்வி) கற்றல் ஆதரவு திட்டங்கள், நூலகங்கள் மற்றும் இடைநிற்றல் குழந்தைகளை பிரதான நீரோட்டத்தில் கொண்டு வருவது மூலம் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்க முயற்சிகளுக்கு பிரதமின் நேரடி திட்டங்கள் துணைபுரிகின்றன. அருகிலேயே வசிக்கும் குழந்தைகளுக்கான மையங்களில் முழு ஆண்டிற்கும் கற்றல் ஆதரவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் பொதுவாக நகர்ப்புற சேரிகளில் அல்லது ஏழை கிராமங்களில் நடத்தப்படுகின்றன, அங்கு குழந்தைகளுக்கு தரமான கல்வி எளிதில் கிடைக்காது.[15]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Murthy named to Pratham DC board". http://thedailyrecord.com/movers-and-shakers/2012/02/22/murthy-named-to-pratham-dc-board/. 
  2. [http://www.wise-qatar.org/farida-lambay
  3. [1]
  4. [2]
  5. "Kravis Prize Awardee". Claremont McKenna College.
  6. "Skoll award for Madhav Chavan and Pratham". இந்திய அஞ்சல் துறை. Archived from the original on 20 December 2014. பார்க்கப்பட்ட நாள் 20 September 2011.
  7. "Pratham Education Foundation". www.luiprize.org. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
  8. 8.0 8.1 Photo courtesy GiveWell.
  9. "Pratham History".
  10. "Pratham Harvard Business School" (PDF). Archived from the original (PDF) on 26 May 2012. பார்க்கப்பட்ட நாள் 20 September 2011.
  11. "Pratham ASER".
  12. "Read India: Helping primary school students in India acquire basic reading and math skills (RIP) | the Abdul Latif Jameel Poverty Action Lab".
  13. "ASER Report 2005" (PDF).
  14. "Pratham's Contributions to Indian Education Policy Debate".
  15. "Pratham Direct Programmes".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதம்&oldid=3937076" இலிருந்து மீள்விக்கப்பட்டது